சொத்து வரி உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து கொட்டும் மழையிலும் அமமுக கண்டன கூட்டம்

சொத்து வரி உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து கொட்டும் மழையிலும் அமமுக கண்டன கூட்டம்
X

முதுகுளத்தூரில் சொத்து வரி உயர்வை கண்டித்து அமமுக சார்பில் நடைபெற்ற கண்டனக் கூட்டம்.

சொத்து வரி உயர்வை கண்டித்து அமமுக சார்பில் முதுகுளத்தூரில் நடைபெற்ற கண்டனக் கூட்டத்தில் ஏராளமானோர் பங்கேற்றனர்.

தமிழ்நாட்டில் சொத்து வரி உயர்வை கண்டித்து எதிர்க்கட்சிகள் சார்பாக தமிழ்நாடு முழுக்க கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டு வருகிறது.

தமிழகத்தில் மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகளில் சொத்து வரிகள் 25 சதவிகிதம் முதல் 150 சதவிகிதம் வரை உயர்த்தப்படுவதாக தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. அதே சமயம் மத்திய அரசின் நிர்பந்தம் காரணமாகவே சொத்து வரி உயர்த்தப்படுவதாக அரசு தெரிவித்துள்ளது.

இந்த வரி உயர்வை எதிர்க்கட்சிகளான அமமுக, அதிமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடுமையாக எதிர்த்து வருகின்றன. அதன்படி சொத்து வரி உயர்வை கண்டித்து அமமுக சார்பாக தமிழ்நாடு முழுக்க கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் இன்று, ராமநாதபுரம் மேற்கு மாவட்ட அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் திமுக அரசின் சொத்து வரி உயர்வை கண்டித்தும் அதை திரும்பப் பெறக் கோரியும் முதுகுளத்தூரில் தெருமுனை பிரச்சாரம் மற்றும் கண்டனக் கூட்டம் நடந்தது.

இதில், மேற்கு மாவட்ட கழக செயலாளர் முருகன் கழக புரட்சித்தலைவர் எம்ஜிஆர் மன்ற செயலாளர் பரமநாதன், நகர கழக செயலாளர் சுந்தரமூர்த்தி மற்றும் கழக நிர்வாகிகள் மழையையும் பொருட்படுத்தாமல் கொட்டும் மழையில் ஏராளமானோர் பங்கேற்றனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!