பண்பகம் அறக்கட்டளையின் ஆம்புலன்ஸ் அர்ப்பணிப்பு நிகழ்ச்சி

பண்பகம் அறக்கட்டளையின் ஆம்புலன்ஸ் அர்ப்பணிப்பு நிகழ்ச்சி
X

ஏர்வாடியில் பண்பகம் அறக்கட்டளையின் ஆம்புலன்ஸ் அர்ப்பணிப்பு நிகழ்ச்சி. 

பண்பகம் அறக்கட்டளையின் ஆம்புலன்ஸ் அர்ப்பணிப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

பண்பகம் அறக்கட்டளையின் ஆம்புலன்ஸ் அர்ப்பணிப்பு நிகழ்ச்சி ஏர்வாடியில் சித்திக் ரஹ்மான் அம்பலம் தலைமையில் நடைபெற்றது.

ஏர்வாடி தர்ஹாவை தலைமையாகக் கொண்டு இயங்கிவரும் பண்பகம் அறக்கட்டளை பல ஆண்டுகளாக மனநலம் பாதிக்கப்பட்ட மற்றும் இயலாதவர்களுக்கு உணவளிப்பது, ஏர்வாடி உட்பட பல கிராமங்களில் மூவாயிரத்துக்கும் மேற்பட்ட மரக்கன்றுகளை வழங்கி பராமரித்து வருகிறது.

விதவைகள் சுயதொழில் செய்வதற்காக தையல் பயிற்சியுடன் கூடிய தையல் மிஷின் வழங்குதல் மற்றும் சிறு தொழில் செய்வதற்காக கிரைண்டர் வழங்குதல் மற்றும் கிராமபுரத்தில் உள்ளவர்களுக்கு ஆடுகள் வழங்குதல், மேலும் உயர்கல்விக்கான வழிகாட்டி முகங்கள் போன்ற எண்ணற்ற சமூக சேவையில் ஈடுபட்டு வருகிறது.

மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று பண்பகம் அறக்கட்டளை சார்பாக அனைத்து சமுதாய மக்களும் பயன்பெறும் வகையில் ஆம்புலன்ஸ் அர்ப்பணிப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு சிறப்பு அழைப்பாளர்கள்களாக இஸ்லாமிய பைத்துல்மால் கூட்டமைப்பின் தலைவர் எஸ் எம் ஹிதாயத்துல்லா அவர்கள், மண்டபம் திமுக ஒன்றிய செயலாளர் ஜீவானந்தம் ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டனர்.

மேலும் எஸ்டிபிஐ கட்சியின் கிழக்கு மாவட்ட துணைத்தலைவர் சோமு, மண்டபம் ஒன்றிய கவுன்சிலர் அஜ்மல் சரிபு, பண்பகம் அறக்கட்டளையின் நிறுவனத் தலைவர் எம் எஸ் முஹம்மது இஸ்ஹாக் மற்றும் முக்கியஸ்தர்கள் முன்னிலையில் அனைத்து சமுதாய மக்களுக்காக பண்பகம் அறக்கட்டளை சார்பாக ஆம்புலன்ஸ் அர்ப்பணம் செய்யப்பட்டது.

இறுதியாக பண்பகம் அறக்கட்டளையின் நிர்வாகி நூருதீன் நன்றி உரையாற்றினார்கள். இந்நிகழ்ச்சிகான ஏற்பாட்டினை மக்கள் தொடர்பு செய்தியாளர் சுபைர் ஆப்தீன் செய்திருந்தார்.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!