தமிழக மீனவர் 55 பேர் நிபந்தனைகளுடன் விடுதலை :இலங்கை நீதிமன்றம் உத்தரவு

தமிழக மீனவர் 55 பேர் நிபந்தனைகளுடன் விடுதலை :இலங்கை நீதிமன்றம் உத்தரவு
X

பைல் படம்

இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர் 55 பேரை நிபந்தனைகளுடன் விடுதலை செய்து இலங்கை நீதி மன்றம் உத்தரவிட்டது.

ராமேஸ்வரம் மற்றும் ஜெகதாபட்டிணத்தில் இருந்து கடந்த டிசம்பர் 18 மற்றும் 20 ஆம் தேதிகளில் மீன்பிடிக்கச் சென்று இலங்கை கடற்படையால் 55 மீனவர்கள் கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்ட 55 மீனவர்களின் வழக்கு இலங்கையில் இன்று ஊர்காவற்துறை நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி கஜநிதிபாலன் மீனவர்கள் 55 பேரையும் நிபந்தனைகளுடன் விடுதலை செய்து உத்தரவிட்டார்.

இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைந்து மீன் பிடித்ததால் விடுதலை செய்யப்பட்ட மீனவர்கள் பயன்படுத்திய 8 மீன்பிடி விசைப்படகுகளுக்கு விசாரணை வழக்கு, எப்ரல் மாதம் 1ந்தேதி வரும் அப்போது படகின் உரிமையாளர்கள் நீதிமன்றத்தில் ஆஐராக வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார்.

இதைனையடுத்து விடுதலை செய்யப்பட்ட மீனவர்கள் 55 பேரும் கொழும்புவில் உள்ள மெருஹானா முகாமிற்கு அழைத்து சென்றனர். விடுதலை செய்யப்பட்ட மீனவர்கள் ஓரிரு நாட்களில் விமானம் மூலம் தாயகம் திரும்புவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!