இராமநாதபுரம் மாவட்டத்தில் 217 போலீசார் பணியிடமாற்றம்

இராமநாதபுரம் மாவட்டத்தில் 217 போலீசாரை பணியிடமாற்றம் செய்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திக் உத்தரவு.

இராமநாதபுரம் மாவட்டத்தில் சிறப்பு சார்பு ஆய்வாளர்கள் 32 பேர் உள்பட 217 போலீசாரை பணியிட மாறுதல் செய்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திக் உத்தரவிட்டார்.

இராமநாதபுரம் மாவட்டத்தில் ஒரே இடத்தில் 3 ஆண்டுகள் பணியாற்றிய போலீசார் பணியிட பொது மாறுதல் செய்வது வழக்கம். இதன்படி , இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள 42 காவல் நிலையங்களில் பணியாற்றிய சிறப்பு சப் இன்ஸ்பெக்டர்கள் 32 பேர், பெண் போலீசார் 41 பேர், முதல் நிலை காவலர் 42 பேர், தலைமை காவலர்கள் 71 பேர் , போலீசார் 31 பேர் என 217 பேரை பணியிட மாறுதல் செய்யப்பட்டுள்ளனர்.

Tags

Next Story
ai and business intelligence