மதுரைக்கு கடத்தவிருந்த 1200 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்: ஒருவர் கைது

மதுரைக்கு கடத்தவிருந்த 1200 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்: ஒருவர் கைது
X
இராமநாதபுரம் அருகே மதுரைக்கு கடத்தவிருந்த 1200 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல், ஒருவர் கைது ஒருவர் தப்பி ஓட்டம்.

இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே மகிண்டி விலக்கு என்னுமிடத்தில் உணவு கடத்தல் பிரிவு போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருக்கும் போது, கொழுந்துறை கிராமத்திலிருந்து மதுரைக்கு மினி வேனில் 30 கிலோ கொண்ட 40 மூடை (1200 கிலோ) ரேஷன் அரிசி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. வண்டி ஓட்டுநர் மணிகண்டன் என்பவர் கைது செய்யப்பட்டார். ரேஷன் அரிசி வியாபாரி பரமக்குடியை சேர்ந்த பாலமுருகன் என்ற முறுக்கு செந்தில் தப்பி ஓடி விட்டார். இதனையடுத்து ரேஷன் அரிசி, மினி வேன் ஆகியவற்றை உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் பறிமுதல் செய்து கீழத்தூவல் காவல் நிலையம் கொண்டு வந்து விசாரணை செய்து வருகின்றனர்.

Tags

Next Story
ai automation digital future