வடமாடு மஞ்சுவிரட்டு நிகழ்வில் 11 காளைகள் மாடுபிடி வீரர்கள் பங்கேற்பு

வடமாடு மஞ்சுவிரட்டு  நிகழ்வில்  11 காளைகள் மாடுபிடி வீரர்கள் பங்கேற்பு
X

முதுகுளத்தூர் பகுதியில் உள்ள எஸ்.என்.ஆர். பழங்குளம் கிராமத்தில் நடைபெற்ற வடமாடு மஞ்சுவிரட்டு 

முதுகுளத்தூர் பகுதியில் உள்ள எஸ்.என்.ஆர் பழங்குளம் கிராமத்தில் வடமாடு மஞ்சுவிரட்டு விழா நடைபெற்றது

முதுகுளத்தூர் அருகே வடமாடு மஞ்சுவிரட்டு விழா. 11 காளைகள், 100க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்கள் பங்கேற்பு.

இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அடுத்த எஸ்.என்.ஆர்.பழங்குளம் கிராமத்தில் அமைந்துள்ள அம்மன் கோவில் பூத்தட்டு திருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு, எருதுகட்டு, வடமாடு உரிமையாளர்கள் நலச்சங்கம் மற்றும் எஸ். என்.ஆர்.பழங்குளம் கிராம மக்கள் இணைந்து நடத்தும் முதலாமாண்டு வடமாடு மஞ்சுவிரட்டு போட்டி நடைபெற்றது.

இதில் மதுரை, இராமநாதபுரம் மற்றும் சிவகங்கை, புதுக்கோட்டை பகுதிகளில் இருந்து 11 காளைகள் கலந்து கொண்டது. காளையை அடக்க மாடுபிடி வீரர்கள் 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இதில் மைதானத்தில் வடம் பூட்டப்பட்டு ஒவ்வொரு காளைகளாக பங்கேற்றன. 9 வீரர்கள் கொண்ட குழுவினர் களம் இறங்கினர். சில காளைகள் வீரர்களின் பிடியில் சிக்கியது. சீறிப் பாய்ந்த பல முரட்டுக் காளைகள் வீரர்களுக்கு சவாலாக நின்று விளையாடியதால் பிடிபடவில்லை. இதில் பிடிபடாத மாடுகளுக்கும், காளைகளை அடக்கிய வீரர்களுக்கும் பணமும், பரிசுகளும் வழங்கப்பட்டன.

மேலும் சுற்று வட்டார பகுதிகளில் இருந்தும், வெளி மாவட்ட பகுதிகளில் இருந்தும் ஏராளமானோர் பார்வையாளர்களாக கலந்துகொண்டனர். வடமாடுவிழாற்கான ஏற்பாடுகளை எஸ்.என். ஆர். பழங்குளம் கிராம பொதுமக்கள் செய்திருந்தனர். இவ்விழாவை காண இராமநாதபுரம், விருதுநகர், தூத்துக்குடி, மதுரை மற்றும் சிவகங்கை மாவட்ட பகுதிகளிலிருந்தும் சுற்றுவட்டார கிராமத்தினர் ஏராளமானோர் வடமாடு மஞ்சுவிரட்டு போட்டியை கண்டுகளித்தனர்.

Tags

Next Story
ai marketing future