மாநில அளவிலான கபடி போட்டி: வீரர்கள் தேர்வு

மாநில அளவிலான கபடி போட்டி: வீரர்கள் தேர்வு
X
இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரில் மாநில அளவிலான கபடி வீரர்கள் தேர்வு.

இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் சோனைமீனாள் மகளிர் கல்லூரியில் இராமநாதபுரம் மாவட்டம் ஆமெச்சூர் கபாடி கழகத்தின் சார்பில் மாநில அளவிலான ஜூனியர் ஆண்களுக்களுக்கான சாம்பியன்ஷிப் கபாடி போட்டி நடைபெற்றது.

இதில் 38 மாவட்டங்களில் இருந்து 456 வீரர்கள் பங்கெடுத்து விளையாடி வருகின்றனர். இவர்கள் வெற்றியின் அடிப்படையில் தகுதி சுற்றுக்கு தேர்வு நடைபெறும். இறுதி போட்டியில் பங்கு பெற்று வெற்றி பெறும் அணிகளுக்கு பரிசுகள் வழங்கப்படும். இந்த அணியில் சிறப்பாக விளையாடும் வீரர்கள் மாநில அளவிலான அணிக்கு தேர்வு செய்யபடுவார்கள். இந்த போட்டி இராமநாதபுரம் ஆமெச்சூர் கபடி கழக தலைவர் D.ஜெயக்குமார் தலைமையில் நடைபெறுகிறது.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!