வங்கிக் கணக்கு மாற்ற லஞ்சம் வாங்கிய அதிகாரி

வங்கிக் கணக்கு மாற்ற லஞ்சம் வாங்கிய அதிகாரி
X
முதுகுளத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் அதிகாரி லஞ்சம் வாங்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரல்.

இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஊரக வளர்ச்சி மேலாளராக பணிபுரிந்து வருபவர் பாலதண்டாயுதம். இவர் அலுவலக இருக்கையில் அமர்ந்து கொண்டு லஞ்சம் வாங்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. ஊராட்சி மன்ற தலைவர்களுக்கான வங்கி கணக்கை ஒரு வங்கிக் கணக்கிலிருந்து மற்றொரு வங்கிக் கணக்கிற்கு பணத்தை மாற்ற அதிகாரிகளின் ஒப்புதல் தேவை என்பதால் ஒவ்வொரு ஊராட்சி மன்ற தலைவரிடம் பாலதண்டாயுதம் 5,000 லஞ்சம் வாங்குவதாக தகவல் வந்தது. இதன் அடிப்படையில் செம்மன்குடி ஊராட்சி மன்ற தலைவி கமலாவிடம் பணம் வாங்கும் போது அதனை அவர் வீடியோ எடுத்துள்ளார். ஏற்கனவே முதுகுளத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் அதிகாரிகள் லஞ்சம் வாங்குவதாக சோதனை நடத்தப்பட்டு வட்டார வளர்ச்சித் துறை அலுவலர் மங்களேஸ்வரியிடம் இருந்து கணக்கில் வராத 60 ஆயிரம் ரொக்கம் பறிமுதல் செய்த நிலையில் தற்போது ஊரக வளர்ச்சி மேலாளர் பாலதண்டாயுதம் லஞ்சம் வாங்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!