மனநலம் பாதித்த இளம்பெண்ணை பாலியல் கொடுமை செய்தவருக்கு சாகும்வரை சிறை

மனநலம் பாதித்த இளம்பெண்ணை பாலியல் கொடுமை செய்தவருக்கு சாகும்வரை சிறை
X

மனநலம் பாதித்த இளம்பெண்ணை பாலியல் கொடுமை செய்த வழக்கில் சாகும்வரை சிறை தண்டனை பெற்ற கருப்பசாமி

ராமநாதபுரத்தில் மனநலம் பாதித்த இளம்பெண்ணை பாலியல் கொடுமை செய்தவருக்கு சாகும்வரை சிறை தண்டனை வழங்கி நீதிமன்றம் உத்தரவு

ராமநாதபுரம் மாவட்டம் சின்னபாலத்தை சேர்ந்த மனநலம் பாதிக்கப்பட்ட இளம்பெண்ணை கடந்த 2017ம் ஆண்டு அதே பகுதியை சேர்ந்த கருப்பசாமி என்பவர் அத்துமீறி வீடுபுகுந்து பாலியல் துன்புறுத்தல் செய்துள்ளார். இதுகுறித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கருப்பசாமியை கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டார். இந்த வழக்கு ராமநாதபுரம் மகளிர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த மகளிர் நீதிமன்ற நீதிபதி ஏ. சுபத்திரா, குற்றவாளிக்கு சாகும்வரை சிறை தண்டனையும் ரூ.13 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்துள்ளார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!