எஸ்.பி அலுவலகம் அருகே மனைவியை கொலை செய்த கணவன்

இராமநாதபுரம் மாவட்ட எஸ்பி., அலுவலகம் அருகே கணவன் மனைவியை வெட்டி படுகொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இராமநாதபுரம் வ.உ.சி நகரைச் சேர்ந்தவர் சரவணன். இவரது மனைவி சிவபாலா ராமநாதபுரம் தனியார் பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார். கணவன், மனைவி இடையே கருத்து வேறுபாடு காரணமாக இராமநாதபுரம் குடும்ப நல நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் விசாரணைக்கு இன்று காலை சென்று விட்டு சிவபாலா, ராமநாதபுரம் மாவட்ட எஸ்பி., அலுவலகம் அருகே சீதக்காதி சேதுபதி ஸ்டேடியம் நுழைவாயில் பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவரை பின்தொடர்ந்த கணவர் சரவணன் அரிவாளால் வெட்டி கொலை செய்துவிட்டு கேணிக்கரை காவல் நிலையத்தில் சரணடைந்தார். கேணிக்கரை போலீசார் சரவணனிடம் கொலை குறித்து விசாரணை செய்து வருகின்றனர்.சம்பவ இடத்திற்கு வந்த மாவட்ட எஸ்பி., கார்த்திக் ஆய்வு மேற்கொண்டு சிவபாலா உடலை பிரேத பரிசோதனைக்காக இராமநாதபுரம் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பு வைத்தார். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் அருகே கணவன் மனைவியை சரமாரியாக வெட்டி படுகொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபப்பை ஏற்படுத்தியது.


Tags

Next Story
வெப்சைட் ஓபன் பண்ண தெரியலையா? இதோ ஈஸியா கத்துக்கோங்க!