ராமேஸ்வரம் மீனவர்கள் 9 பேரை இலங்கை கடற்படை சிறை பிடிப்பு

ராமேஸ்வரம் மீனவர்கள் 9 பேரை இலங்கை கடற்படை சிறை பிடிப்பு
X
எல்லை தாண்டி வந்ததாக கூறி ராமேஸ்வரம் மீனவர்கள் 9 பேரை இலங்கை கடற்படை சிறை பிடித்துள்ளது.

ராமேஸ்வரத்திலிருந்து நேற்று 400-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன்வளத் துறை அனுமதி பெற்று கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர்.

அப்போது நேற்று இரவு கிருபை என்பவருக்கு சொந்தமான விசைபடகு எல்லை தாண்டி வந்ததாக கூறி இலங்கை கடற்படையினர் படகையும் அதிலிருந்த கிருபை, மாரி, மிக்கேயான்,வளன்கெளசிக் உட்பட 9 மீனவர்களையும் சிறைபிடித்து காங்கேசன் துறை கடற்படை முகாமுக்கு கொண்டு சென்றனர். கொண்டு சென்ற மீனவர்கள் தனிமைப்படுத்தி வைக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரியவருகிறது.

இந்நிலையில் ஏற்கனவே இலங்கை கடற்படையால் எல்லை தாண்டி வந்ததாக கூறி 43 மீனவர்கள் சிறை பிடிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டு உள்ள நிலையில் 12 மீனவர்கள் விடுவிக்கப்பட்டு இன்னும் நாடு திரும்பாத நிலையில் நேற்று மீண்டும் 9 மீனவர்கள் சிறை பிடித்திருப்பது மீனவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Next Story
ராசிபுரம் அருகே இரு சமூகத்தினர் மோதல்- போலீசார் குவிப்பு..!