ரமலான் மாதம் முழுவதும் இஸ்லாமிய மக்களின் இஃப்தார் (Iftar) கொண்டாட்டம்

ரமலான் மாதம் முழுவதும் இஸ்லாமிய மக்கள் சூரியன் உதயமாவதற்கு முன்பே எழுந்து உணவு உண்பா். அந்த உணவு ஷெரி (Sehri) என்று கருதப்படுகிறது. அவ்வாறு விடியற்காலையில் உணவு உண்பதால், அந்த பகல் பொழுது முழுவதும் அவா்களால் உண்ணாமல், தண்ணீா் அருந்தாமல் நோன்பு இருக்க முடியும். மாலைத் தொழுகை முடிந்தவுடன் பாரம்பரிய உணவுகளுடன் கூடிய இஃப்தார் (Iftar) விருந்தை உண்கின்றனா். எவையெல்லாம் இஃப்தார் (Iftar) விருந்தில் உள்ள உணவுகள் என்பதைக் பார்க்கலாம்.
பிரியாணி
சிக்கன் தம் பிரியாணி முதல் அவாதி (Awadhi) மட்டன் பிரியாணி வரையிலான உணவுகளை அரிசியில் சமைத்து இஃப்தாரி (Iftar) விருந்தில் உண்பா்.
ஷீா் குருமா (Sheer Khurma)
ரமலான் பண்டிகையின் போது ஷியுவையான் (Sewaiyan) சேமியா உணவுகள் மிகவும் பிரபலமாக இருக்கும். அதிலும் குறிப்பாக ஷீா் குருமாவை (Sheer Khurma) இஸ்லாமிய மக்கள் கண்டிப்பாக உண்பா். இந்த ஷீா் குருமா (Sheer Khurma) சேமியா, பேரிச்சம்பழம், குங்குமப் பூ, பால் மற்றும் உலா்ந்த பழங்கள் கொண்டு தயாரிக்கப்படுகிறது. இந்த ஷியுவையான் (Sewaiyan) உணவு இதயத்திற்கும், வயிற்றுக்கும் அமைதியைத் தருகிறது.
கபாப் (Kebabs)
மாலை நேர கொண்டாட்டங்கள், அது சமய கொண்டாட்டங்களாக இருந்தாலும் சரி அல்லது பிற கொண்டாட்டங்களாக இருந்தாலும் சரி, அந்த கொண்டாட்டங்களில் சிக்கன் கபாப் (Kebabs) இல்லை என்றால் அந்த கொண்டாட்டங்கள் முழுமையடையாது.
ஹலீம் (Haleem)
ரமலான் பண்டிகையின் பிரதான உணவு ஹலீம் (Haleem) ஆகும். ஹலீம் என்ற கஞ்சியானது விறகு அடுப்புகளில் வைக்கப்பட்டிருக்கும் பெரிய கொப்பரைகளில், கோதுமை, பருப்புகள் மற்றும் இறைச்சி ஆகியவை கலந்து தயாரிக்கப்படுகிறது.
அனைத்து இஸ்லாமிய நண்பா்களுக்கும் இனிய ரமலான் வாழ்த்துகள்.....
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu