ரஜினிகாந்த் பிறந்த நாள்: மாநில பாஜக தலைவர் அண்ணாமலை டுவிட்டரில் வாழ்த்து

ரஜினிகாந்த் பிறந்த நாள்: மாநில பாஜக தலைவர் அண்ணாமலை டுவிட்டரில் வாழ்த்து
X

பைல் படம்.

ரஜினிகாந்த் பிறந்த நாளை முன்னிட்டு மாநில பாஜக தலைவர் அண்ணாமலை டுவிட்டரில் தனது வாழ்த்தை தெரிவித்துள்ளார்.

தமிழ்த் திரையுலகின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறார். இதனையொட்டி அவரது ரசிகர்கள் உலகம் முழுவதும் இன்று கொண்டாடுகின்றனர்.

இந்நிலையில், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தனது டுவிட்டர் பதிவில், இன்று பிறந்தநாள் கொண்டாடும் தாதாசாகெப் பால்கே, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.

அவர் நல்ல ஆரோக்கியத்துடன் சீரும் சிறப்புமாக வாழ நான் அந்த இறைவனை வேண்டிக்கொள்கிறேன். மகாவதார் பாபாஜியின் கருணையும் அருளும் என்றும் கிடைக்கட்டும் என தனது வாழ்த்தை தெரிவித்துள்ளார்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!