ஆசிரியர்களுக்கு ஒழுக்கம் முக்கியம்-தமிழ்நாடு ஆசிரியர் சங்க மாநிலத்தலைவர்
தமிழ்நாடு ஆசிரியர் சங்க மாநிலத்தலைவர் பி.கே.இளமாறன்
பாலியல் தொடர்பானச் செயலில் ஈடுபடும் ஆசிரியர்களை பணிநீக்கம் செய்தும் கல்விச்சான்றிதழ்களைப் பறிமுதல் செய்து நடவடிக்கை எடுக்க தமிழ்நாடு ஆசிரியர் சங்க மாநிலத்தலைவர் பி.கே.இளமாறன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் மாநிலத்தலைவர் பி.கே.இளமாறன் அவரது அறிக்கையில்.
ஆசிரியர் பணி அறப்பணி அதனை அர்ப்பணி என்ற தாரகமந்திரத்திற் கேற்ப ஆசிரியர்கள் பணிபுரிந்துவருகிறார்கள்.இந்நிலையில் ஒரு சிலரின் தவறான செய்கையால் ஆசிரியர் சமுதாயமே தலைகுனியவேண்டியுள்ளது.
பெற்றோர்கள் குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்புவது படிப்பதற்கும் நல்லப்பழக்கவழக்கங்களைக் கற்றுக்கொள்வதில் மட்டும் திருப்தியடைந்து விடவில்லை. மாறாக குழந்தைகள் பாதுகாப்பாகத் திரும்பிவருவார்கள் என்று நம்புவது ஆசிரியர்கள் மீது வைத்துள்ள நம்பிக்கையால் மட்டுந்தான். அதனை கெடுப்பதற்காகவே சில ராஜகோபால் போன்ற தரங்கெட்டவர்களால் ஆசிரியரின் புனிதம் கெட்டுப்போகிறது.
பாலியல் தொடர்பானச்செயலில் ஈடுபடுவோர் எந்தப்பள்ளியைச் சார்ந்தவராக இருந்தாலும் அவர் மீது குற்றம் நிருபிக்கப்பட்டவுடன் பணிநீக்கம் செய்வதோடு அவரின் கல்விச்சான்றிதழ்கள் பறிமுதல் செய்து நடவடிக்கை எடுப்பதுதான் பாடம்புகட்டுவது மின்றி பெற்றோர்களுக்கும் நம்பிக்கையை ஏற்படுத்தும். தற்போது ஆசிரியர் ரராஜகோபாலானை கைதுசெய்து உடனடி நடவடிக்கை மேற்கொண்ட தமிழக அரசினை தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் பாராட்டி வரவேற்கின்றது.
மேலும், எதிர்காலத்தில் ஆன்லைன் வகுப்புகள் நடத்துவது கட்டாயமாகும் சூழல் உருவாகலாம். ஆகையால் ஆன்லைன் வகுப்புகளுக்கென்று அரசே தனி சாப்ட்வேர் உருவாக்கப்படவேண்டும் அதன் முழுக்கட்டுபாடும் அரசின் வசம் இருக்கவேண்டும். இதனை பரிசீலித்து நடவடிக்கை எடுக்கும்படி மாண்புமிகு.முதல்வர் அவர்ளை தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் சார்பில் பணிவுடன் வேண்டுகிறேன் என தெரிவித்துள்ளார்.
Tags
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu