தமிழகத்தில் மழை, வெள்ளம்: மாநிலம் முழுவதும் என்ன நிலவரம்?

தமிழகத்தில் மழை, வெள்ளம்: மாநிலம் முழுவதும் என்ன   நிலவரம்?
X

கோப்பு படம்

கடந்த 24 மணி நேரத்தில் 30 மாவட்டங்களில் மழைப்பொழிவு ஏற்பட்டுள்ளன. மாநில சராசரி மழைப்பொழிவு 3.6 மி.மீ. ஆகும்.

1. மழை அளவு

கடந்த 24 மணி நேரத்தில், 30 மாவட்டங்களில் மழைப்பொழிவு ஏற்பட்டுள்ள நிலையில் மாநில சராசரி 3.6 மி.மீ. ஆகும். திருச்சிராப்பள்ளி மாவட்டம், மணப்பாறையில் (274.6 மி.மீ.) அதிகனமழையும், தென்காசி மாவட்டம், ஆயிகுடி (101.0 மி.மீ.) மற்றும் தேனி மாவட்டம், பெரியாறு (81.0 மி.மீ.) ஆகிய இரண்டு இடங்களில் கனமழையும் பெய்துள்ளது.

தென்காசி மாவட்டத்தில் 41.06 மி.மீட்டரும், தருமபுரி மாவட்டத்தில் 19.௭௪ மி.மீட்டரும், திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் 13.68 மி.மீட்டரும், புதுக்கோட்டை 9.25 மி.மீட்டரும், தேனி மாவட்டத்தில் 9.15 மி.மீட்டரும், திருவண்ணாமலை மாவட்டத்தில் 6.74 மி.மீட்டரும், கன்னியாகுமரி மாவட்டத்தில் 6.29 மி.மீட்டரும், நாமக்கல் மாவட்டத்தில் 6.09 மி.மீட்டரும், வேலூர் மாவட்டத்தில் 5.37மி.மீட்டரும், கரூர் மாவட்டத்தில் 4.42 மி.மீட்டரும் மழை பெய்துள்ளது.

வடகிழக்கு பருவமழை 01.10.2021 முதல் 07.12.2021 வரை 683.4 மி.மீ பெய்துள்ளது. இது இயல்பான மழையளவான 385.9 மி.மீட்டரை விட 77 சதவீதம் கூடுதல் ஆகும்.

2. முக்கிய அணைகள் / நீர்த்தேக்கங்களில் நீர் இருப்பு, நீர் வாத்து மற்றும் நீர் வெளியேற்ற விபரம் ( அட்டவணையில் )


3. நிவாரண முகாம்கள்

பெருநகர சென்னை மாநகராட்சி பகுதியில் 257 நபர்கள் 3 நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இன்று காலை 1,330 உணவு பொட்டலங்கள் வழங்கப்பட்டுள்ளன. இதர மாவட்டங்களில், 2156 நபர்கள் 36நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

> செங்கல்பட்டு மாவட்டத்தில், 104 நபர்கள் 2 நிவாரண முகாம்களிலும்,

> கன்னியாகுமரி மாவட்டத்தில், 8 நபர்கள் 1 நிவாரண முகாம்களிலும்,

> இராமநாதபுரம் மாவட்டத்தில், 729 நபர்கள் 5 நிவாரண முகாமிலும்,

> இராணிப்பேட்டை மாவட்டத்தில், 63 நபர்கள் 1 நிவாரண முகாமிலும்,

> தூத்துக்குடி மாவட்டத்தில், 25 நபர்கள் 1 நிவாரண முகாமிலும்,

> திருவள்ளூர் மாவட்டத்தில், 42 நபர்கள் 1 நிவாரண முகாமிலும்,

> திருவண்ணாமலை மாவட்டத்தில், 166 நபர்கள் 8 நிவாரண முகாம்களிலும்,

> வேலூர் மாவட்டத்தில், 1,019 நபர்கள் 17 நிவாரண முகாம்களிலும் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

தமிழ்நாட்டில் மொத்தம் உள்ள 14,138 ஏரிகளில், 8,690 ஏரிகள் முழுக்கொள்ளளவை எட்டியுள்ளது. 2,989 ஏரிகள் 75 சதவீதத்திற்கு மேல் நிரம்பியுள்ளது. தமிழ்நாட்டில் உள்ள 90 நீர்த்தேக்கங்களின் மொத்த கொள்ளளவான 224.297 T.M.C.,-ல், 6.12.2021 நிலவரப்படி, 212.009 T.M.C, நீர்இருப்பு உள்ளது. இது 94.52 சதவீதம் ஆகும்.

4. இந்திய வானிலை ஆய்வு மையத்தின் 06.12.2021 நாளிட்ட அறிக்கை இன்று 07.12.2021, தென் தமிழ்நாடு மற்றும் மேற்கு தொடர்ச்சி

மலைப்பகுதி மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். இதர இடங்களில் வறண்ட வானிலை நிலவும். நாளை 08.12.2021, கடலூர், இராமநாதபுரம், புதுக்கோட்டை , நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை மாவட்டங்களில் இடியுடன் கூடிய

கனமழையும், கடலோர மாவட்டங்களில், இடியுடன் கூடிய மிதமான மழையும், மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதி மாவட்டங்களில் மற்றும் அதனை ஒட்டிய உள்மாவட்டங்களிலும் லேசன மழையும் பெய்யக்கூடும்.

5. பெருநகர சென்னை மாநகராட்சி

> மழை நீர் தேங்கியுள்ள 6 பகுதிகளில், அதிக திறன் கொண்ட 26பம்புகள் மூலம் நீர் அகற்றப்பட்டு வருகிறது.

> இதுவரை 19,740 மருத்துவ முகாம்கள் மூலம் 6,48,689 நபர்கள் பயனடைந்துள்ளனர்.

> மழை நீர் சூழ்ந்த பகுதிகளில், 918 அதிக திறன் கொண்ட பம்புகளும் தயார் நிலையில் உள்ளன. 54 படகுகள் மீட்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

6. சேத விபரம்

> கடந்த 24 மணி நேரத்தில் மதுரை, விருதுநகர் மாவட்டங்களில் 2உயிரிழப்புகள் பதிவாகியுள்ளது.

> 47 கால்நடைகள் இறந்துள்ளன. >633 குடிசைகள் பகுதியாகவும், 55 குடிசைகள் முழுமையாகவும், ஆக மொத்தம் 688 குடிசைகளும், 100 வீடுகள் பகுதியாகவும், 15 வீடு முழுமையாகவும் மொத்தம் 115 வீடுகள் சேதமடைந்துள்ளன.

> இதுவரை (07.12.2021) 1,27,811 ஹெக்டர் வேளாண்மை பயிர்களும் 16,447 ஹெக்டர் தோட்டக்கலை பயிர்களும் 33 சதவீதத்திற்கு மேல்

பாதிப்படைந்தன.

7. குறிப்பிடத்தக்க நிகழ்வுகள்

* தேனி மாவட்டத்தில் பெய்த மழையின் காரணமாக, போடிநாயக்கனூர் வட்டம், போடிமெட்டு தேசிய நெடுஞ்சாலையில் ஏற்பட்ட நிலச்சரிவு

சீரமைக்கப்பட்டு, போக்குவரத்து அனுமதிக்கப்பட்டுள்ளது. திருச்சிராப்பள்ளி மாவட்டம், மணப்பாறை பகுதியில், 6.12.2.2021 அன்று

காலை 6.00 மணி வரை 7.2 மி.மீ. மழை பதிவான நிலையில், காலை 6 மணி முதல் 9.00 மணி வரை 274.6 மி.மீ. மழை அதிகனமழை பதிவாகியுள்ளது. இதன் காரணமாக அப்பையர்குளம் கரை உடைந்து அருகில் உள்ள

பகுதிகளில் வெள்ள நீர் சூழ்ந்தது. தற்போது அப்பையர்குளத்தின் கரை சீரமைக்கப்பட்டுள்ளது. மேலும், மணப்பாறையில் இருந்து வரும் வெள்ள நீர் கோரையாறு மூலம் காவிரி ஆற்றில் கலக்கும் என்பதால் கரையோர மக்களுக்கு வெள்ள ஆபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

இராணிப்பேட்டை மாவட்டம், நெமிலி வட்டம், வேகா மங்கலம் கிராமத்தைச் சேர்ந்த ஒரு நபர் கிராமத்தின் அருகில் செல்லும் பாலாற்றில் 6.12.2021அன்று, தவறி விழுந்ததைத் தொடர்ந்து, மேற்படி நபரை காப்பாற்ற சென்ற இருவரும் கரை சேர முடியாமல் ஆற்றில் சிக்கியதால் அவர்களை தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறையினர் மற்றும் பொதுமக்கள் பத்திரமாக மீட்டனர்.

7. பொது

> பெருநகர சென்னை மாநகராட்சி கட்டுப்பாட்டு அறைக்கு 13,450புகார்கள் வரப்பெற்று , 12,042 புகார்கள் தீர்வு செய்யப்பட்டுள்ளது. எஞ்சிய புகார்களின் மீது துரித நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

> மாநில அவசரக் கட்டுப்பாட்டு மையத்திற்கு (கட்டணமில்லா தொலைபேசி எண்.1070) வரப்பெற்ற 7227 புகார்களுள், 6937 புகார்கள்

தீர்வு செய்யப்பட்டுள்ளன. மாவட்ட அவசரக் கட்டுப்பாட்டு அறைக்கு (கட்டணமில்லா தொலைபேசி எண் 1077) வரப்பெற்ற 7040 புகார்களுள்,6958 புகார்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

> சென்னையில் மாநில அவசரக் கட்டுப்பாட்டு மையம் 1070, மாவட்டங்களில் மாவட்ட அவசரக் கட்டுப்பாட்டு மையங்கள் 1077 என்ற கட்டணமில்லா தொலைபேசியுடன், 24 மணி நேரமும் இயங்கி வருகிறது. மேலும், பெருநகர சென்னை மாநகராட்சி தொடர்பான

புகார்களுக்கு பொதுமக்கள் 1913 என்ற கட்டணமில்லா தொலைபேசி மூலம் தொடர்பு கொள்ளலாம்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!