அடுத்த 2 மணிநேரத்தில் தஞ்சை உள்ளிட்ட 7 மாவட்டங்களில் மழை

அடுத்த 2 மணிநேரத்தில் தஞ்சை உள்ளிட்ட 7 மாவட்டங்களில் மழை
X
வெப்பச்சலனம் காரணமாக தஞ்சை, நாகை உள்ளிட்ட 7 மாவட்டங்களில் அடுத்த 2 மணி நேரத்திற்கு மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது

வெப்பச்சலனம் காரணமாக தஞ்சை, நாகப்பட்டினம், மயிலாடுதுறை, திருவாரூர், அரியலூர், புதுக்கோட்டை மற்றும் ராமநாதபுரம் ஆகிய 7 மாவட்டங்களில் அடுத்த இரண்டு மணி நேரத்திற்கு மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து வானிலை ஆய்வு மையம் ஏற்கெனவே வெளியிட்டிருந்த அறிவிப்பில், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும், தென் தமிழக மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கன மழை பெய்யக்கூடும் எனவும் தெரிவித்திருந்தது.

அதேபோல சென்னையை பொறுத்தவரை, அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், நகரின் ஒருசில இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும் எனவும் தெரிவித்திருந்தது. மேலும், நகரின் வெப்பநிலை 35-27 டிகிரி செல்சியஸ் பதிவாகும் என்றும் தெரிவித்திருந்தது.

மீனவர்களுக்கான எச்சரிக்கையை பொறுத்தவரை, தமிழக கடரோப்பகுதிகள், தென்மேற்கு வங்கக்கடல், மன்னார் வளைகுடா, குமரிக்கடல் மற்றும் கேரள கடலோரப்பகுதிகளில் மணிக்கு 40-50 கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீசும் என்பதால் இப்பகுதிகளுக்கு மீனவர்கள் மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என்றும் வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!