12 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மிதமான மழை

12 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மிதமான மழை
X
வெப்பச்சலனம் காரணமாக 12 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல்

மன்னார் வளைகுடா பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் மிதமான மழை பெய்து வருகிறது.

இன்று தென்தமிழகம், கோயமுத்தூர், நீலகிரி மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

அதேபோல் நாளை கன்னியாகுமரி, திருநெல்வேலி, மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதி மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள், சேலம், நாமக்கல், தர்மபுரி ,கள்ளகுறிச்சி, திருச்சி, திருப்பத்தூர் , திருவண்ணாமலை ஆகிய பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்

25 மற்றும் 26 ஆம் தேதிகளில் கன்னியாகுமரி, திருநெல்வேலி,மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகள் ,டெல்டா மாவட்டங்கள் , அதனை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

Tags

Next Story
ஈரோடு பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்: கூகுள் நிறுவனத்தின் உதவியுடன் குற்றவாளியை கண்டறியும் முயற்சி