நாளை கோவை, நீலகிரி மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு : சென்னை வானிலை மையம்

நாளை கோவை, நீலகிரி மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு : சென்னை வானிலை மையம்
X

மழை (மாதிரி படம்)

நாளை கோவை, நீலகிரி மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.

சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

தென் மேற்கு பருவக்காற்றால் தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் நீலகிரி, கோவை, தேனி, மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும். மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகளான திருப்பூர், திண்டுக்கல், தென்காசி மற்றும் குமரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும். சேலம், ஈரோடு, தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும்.

நாளை (ஜூன் 17ம் தேதி) நீலகிரி, கோவை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகளான திருப்பூர், திண்டுக்கல், தேனி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும், சேலம் ஈரோடு, தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழையும் பெய்ய வாய்ப்பு உள்ளது.மற்ற மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும் என்று கூறப்பட்டுள்ளது.




Tags

Next Story
Weight Loss Tips In Tamil