பயணிகளின் கனிவான கவனத்திற்கு... முக்கிய ரயில் சேவைகளில் மாற்றம்

பயணிகளின் கனிவான கவனத்திற்கு... முக்கிய ரயில் சேவைகளில் மாற்றம்
X
முன்பதிவு இல்லாத எக்ஸ்பிரஸ் ரயில் சேவைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக, தெற்கு ரயில்வே செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா பெருந்தொற்று பரவலை தடுக்க, ரயில் சேவையை ரயில்வே நிர்வாகம் நிறுத்தி வைத்ததும். தொற்று பரவல் குறைந்ததை அடுத்து, படிப்படியாக ரயில் சேவை இயல்பாகி வருகிறது. அவ்வப்போது, ரயில் சேவைகளில் சில மாற்றங்களையும் ரயில்வே நிர்வாகம் அறிவித்து வருகிறது.

அதன்படி, முன்பதிவு இல்லாத எக்ஸ்பிரஸ் ரயில்களில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன கீழ்கண்ட முன்பதிவு இல்லாத ரயில்கள் மீண்டும் இயக்கப்படுகின்றன. அவற்றின் விவரம் வருமாறு:

கோவை -மேட்டுப்பாளையம் (வண்டி எண். 06816) இடையே மதியம் 3.45 மணிக்கும், மறுமார்க்கமாக மேட்டுப்பாளையம் - கோவை (வண்டி எண். 06813) இடையே காலை 10.55 மணிக்கும் புறப்படும் ரயில் சேவை, மே 23ம் தேதி முதல், மீண்டும் இயக்கப்படுகிறது.

அதேபோல், மதுரை - ராமேஸ்வரம் (வண்டி எண்: 06651) இடையே காலை 6.35 மணிக்கும், ராமேஸ்வரம் - மதுரை (06656) இடையே மாலை 6.05 மணிக்கும், திருச்செந்தூர்- திருநெல்வேலி (06674) இடையே காலை 7.10 மணிக்கும், திருநெல்வேலி- திருச்செந்தூர் (06677) இடையே ரயில் சேவை மீண்டும் தொடங்கிறது.

மதுரை - ராமேசுவரம் (வண்டி எண்: 06651) இடையே காலை 6.45 மணிக்கும், செங்கோட்டை- திருநெல்வேலி (06682) இடையே காலை 6.40 மணிக்கும், திருநெல்வேலி- செங்கோட்டை (06657) இடையே மாலை 6.15 மணிக்கும் புறப்படும் முன்பதிவில்லாத தினசரி எக்ஸ்பிரஸ் ரயில்கள், மே 30-ம் தேதி முதல் மீண்டும் இயக்கப்படும் என்று, தெற்கு ரயில்வே செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.

Tags

Next Story
இன்ஸ்டாகிராம் முடக்கம் !!! பயனர்கள் அதிர்ச்சி !! அதிகரிக்கின்றது புகார்கள் !!! | why does instagram hang up by itself