முன்னாள் அமைச்சர் கே.பி. அன்பழகன் வீடு உள்பட 57 இடங்களில் சோதனை
அதிமுக அமைச்சரவையில் உயர் கல்வித்துறை அமைச்சராக இருந்த, கே.பி. அன்பழகனின் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார், அதிரடியாக சோதனை நடத்தி வருகின்றனர்.
முன்னாள் அமைச்சர் கே.பி. அன்பழகனின் வீடு, அவரது உறவினர்கள், நண்பர்களது வீடுகள் என, சென்னை, தருமபுரி, சேலம், தெலுங்கானா மாநிலம் கரீம் நகர் உள்பட, மொத்தம் 57 இடங்களில், இன்று அதிகாலை முதல் இந்த சோதனை நடைபெற்று வருகிறது.
கடந்த 2016, - 2020, காலகட்டத்தில் அமைச்சராக பதவி வகித்த போது, வருமானத்துக்கு அதிகமாக ரூ. 11.32, கோடி சொத்து சேர்த்தாக எழுந்த புகாரின் பேரில் கே.பி. அன்பழகன், அவரது மனைவி மல்லிகா, மகன்கள் சசிமோகன், சந்திரமோகன், மருமகள் வைஷ்ணவி உள்ளிட்டோர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ள நிலையில், தற்போது, லஞ்ச ஒழிப்புப் போலீசார் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
அதிமுக முன்னாள் அமைச்சர்கள் வேலுமணி, தங்கமணி, சி. விஜயபாஸ்கர், தங்கமணி, எம்.ஆர். விஜயபாஸ்கர் ஆகியோர் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு போலீசார் ஏற்கனவே சோதனை நடத்திய நிலையில், தற்போது ஆறாவது முன்னாள் அமைச்சராக கே.பி. அன்பழகனும் சோதனையில் இருந்து தப்பவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu