முன்னாள் அமைச்சர் வீட்டில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை

முன்னாள் அமைச்சர் வீட்டில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை
X

எஸ் பி வேலுமணி - கோப்புப்படம் 

முன்னாள் அமைச்சர் வேலுமணி வீடு மற்றும் அவருக்குத் தொடர்புடைய இடங்களில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை

அதிமுக முன்னாள் உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் கோவை வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

கோவை குனியாமுத்தூரில் உள்ள வேலுமணி வீட்டில் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த புகாரில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள வேலுமணிக்கு நெருக்கமானவர் வீட்டிலும் சோதனை நடைபெற்று வருகிறது.

அதிமுக ஆட்சியில் உள்ளாட்சித்துறை அமைச்சராக வேலுமணி இருந்தபோது முறைகேடுகள் நடைபெற்றதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், தற்போது சோதனை நடைபெற்று வருகிறது.

சில நாட்களுக்கு முன்னதாக, அதிமுக முன்னாள் போக்குவரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கருக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடைபெற்றது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!