கூட்டுறவுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் சென்ற கார் விபத்தில் சிக்கியது

கூட்டுறவுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் சென்ற கார் விபத்தில் சிக்கியது
X

விபத்தில் சிக்கிய கூட்டுறவு செயலாளர் ராதாகிருஷ்ணன் வாகனம் 

சென்னையில் சுனாமி நினைவு தினத்திற்கு சென்ற கூட்டுறவுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் சென்ற கார் விபத்தில் சிக்கியது.

பட்டினப்பாக்கத்தில் சுனாமி நினைவு தினத்தையொட்டி அஞ்சலி செலுத்த வந்த முன்னாள் சுகாதாரத்துறை செயலாளரும், தற்போதைய கூட்டுறவுத்துறை செயலாளருமான ராதாகிருஷ்ணன் சென்ற வாகனம் விபத்தில் சிக்கியது .

சுற்றுலா வாகனம் ஒன்று எதிரே வந்து மோதியதில் ராதாகிருஷ்ணன் காரின் முன் பகுதி சேதமடைந்தது. இருப்பினும் நல்வாய்ப்பாக ஓட்டுநர் மற்றும் ராதாகிருஷ்ணனுக்கு காயம் ஏற்படவில்லை.

விபத்து நடந்த பகுதிக்கு அருகில் மெரினா காவல்நிலையம் இருந்தும் போக்குவரத்து போலீசார் அங்கு இல்லை என புகார் எழுந்தது.

விபத்து காரணமாக ஏற்பட்ட போக்குவரத்து நெரிசலை ராதாகிருஷ்ணன் தாமாக சரி செய்தார். இதுக்குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!