சிறந்த ஆராய்ச்சி கல்வி நிறுவனங்கள் பட்டியலில் சென்னை பல்கலைக்கழகம்
ஆண்டுதோறும் உலகம் முழுவதும் உள்ள உயர் கல்வி நிறுவனங்களின் செயல்திறன், ஆராய்ச்சி, மாணவர் ஆசிரியர் உறவு உள்ளிட்டவை அடிப்படையாகக் கொண்டு தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டு வருகிறது.
உலகளாவிய உயர்கல்வி ஆய்வாளர்கள் QS (Quacquarelli Symonds) இன் சர்வதேச பல்கலைக்கழக தரவரிசையின் பத்தொன்பதாம் பதிப்பில் 41 இந்தியப் பல்கலைக்கழகங்கள் இடம்பெற்றுள்ளன, அவற்றில் 12 அவற்றின் தரவரிசையை மேம்படுத்தியுள்ளன, 12 நிலையானதாக இருந்தன, 10 சரிவைக் கண்டன மற்றும் ஏழு புதிய நுழைவுப் பல்கலைக்கழகங்கள் இம்முறை இடம்பெற்றுள்ளன.
இதில் சென்னை பல்கலைக்கழகம் 48வது இடத்தைப் பிடித்துள்ளது.
37-வது இடத்தில் ஐ.ஐ.டி., கவுஹாத்தி பிடித்துள்ள நிலையில் 47-வது இடத்தில் ஐ.ஐ.டி. ரூர்கியும், மும்பை ஐ.ஐ.டி. 172-வது இடத்தை பிடித்துள்ளன. பெங்களூருவில் உள்ள IISC 155-வது இடத்துக்கு முன்னேறியுள்ள நிலையில் ஜே.என்.யூ., ஜாமியா மில்லியா,ஐ.ஐ.டி., புவனேஸ்வர், ஜாதவ்பூர் பல்கலை., உள்ளிட்ட கல்விநிறுவனங்கள் பின்னுக்கு சென்றுள்ளன .
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu