/* */

பொன்முடிக்கு தண்டனை.. நீதித்துறை மீதான நம்பிக்கை அதிகரிப்பு: ராமதாஸ்

சொத்துக்குவிப்பு வழக்கில் பொன்முடிக்கு தண்டனை வழங்கப்பட்டுள்ளது நீதித்துறை மீதான நம்பிக்கை அதிகரித்திருப்பதாக ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

HIGHLIGHTS

பொன்முடிக்கு தண்டனை..  நீதித்துறை மீதான நம்பிக்கை அதிகரிப்பு: ராமதாஸ்
X

பா.ம.க. நிறுவனர் மருத்துவர் ராமதாஸ். (கோப்பு படம்).

சொத்துக்குவிப்பு வழக்கில் பொன்முடிக்கு தண்டனை வழங்கப்பட்டுள்ளது நீதித்துறை மீதான நம்பிக்கை அதிகரித்திருக்கிறது என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

பொன்முடி, தனது வருமானத்திற்கு அதிகமாக, ஒரு கோடியே 75 லட்சம் ரூபாய் சொத்து சேர்த்ததாக தொடரப்பட்டிருந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், அவரை விடுதலை செய்த தீர்ப்பை ரத்து செய்து குற்றவாளி என நேற்று முன்தினம் அறிவித்தது.

இன்று தண்டனை விவரம் அறிவிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2006-ஆம் ஆண்டுமுதல் 2011-ஆம் ஆண்டு வரையிலான திமுக ஆட்சிக் காலத்தில் உயா்கல்வித் துறை அமைச்சராக இருந்த பொன்முடி, கனிமவளத் துறை அமைச்சராகவும் பதவி வகித்து வந்தார். அப்போது வருமானத்துக்கு அதிகமாக ரூ. 1 கோடியே 75 லட்சம் சொத்துகள் சோ்த்ததாக ஊழல் தடுப்புப் பிரிவு சார்பில் வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது.

இந்த வழக்கை விசாரித்த விழுப்புரம் சிறப்பு நீதிமன்றம், வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சி மீது கூறப்பட்ட குற்றச்சாட்டுகள் ஆதாரங்களுடன் நிரூபிக்கப்படவில்லை எனக் கூறி, இருவரையும் கடந்த 2016-ஆம் ஆண்டு விடுவித்து தீா்ப்பளித்தது.

இந்தத் தீர்ப்பை எதிர்த்து, அதிமுக ஆட்சிக் காலத்தில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் மேல் முறையீடு செய்தனர்.

மேல்முறையீடு செய்யப்பட்ட வழக்கு நிலுவையில் இருந்த நிலையில், நேற்று முன்தினம் பொன்முடி, விசாலாட்சி ஆகியோர் விடுதலை செய்யப்பட்டதை ரத்து செய்து, அவர்கள் குற்றவாளிகள் என சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஜெயச்சந்திரன் தீர்ப்பளித்தார். இந்தநிலையில், வழக்கின் தண்டனை விவரம் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்த வழக்கில் அமைச்சர் பொன்முடி மற்றும் மனைவி ஆகியோர் மேல்முறையீடு செய்வதற்கு வசதியாக 30 நாள்கள் தண்டனையை நிறுத்தி வைப்பதாகவும் நீதிபதி தெரிவித்துள்ளார்.

சொத்து குவித்து வழக்கில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ள பொன்முடி, அமைச்சர் பதவியையும், சட்டப்பேரவை உறுப்பினர் பதவியையும் இழந்துள்ளார்.

இந்நிலையில் சொத்துக்குவிப்பு வழக்கில் பொன்முடிக்கு தண்டனை வழங்கப்பட்டுள்ளது நீதித்துறை மீதான நம்பிக்கை அதிகரித்திருக்கிறது என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், வருவாய்க்கு மீறி சொத்துக்குவித்த வழக்கில் உயர்கல்வித்துறை அமைச்சர் க.பொன்முடி அவர்களுக்கு 3 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.50 லட்சம் அபராதமும் விதித்து சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது. உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு பொதுவாழ்க்கையில் இருப்பவர்களுக்கு ஒரு பாடம்.

அரசியலும், பொதுவாழ்க்கையும் தூய்மையாக இருக்க வேண்டும் என்பது தான் பாட்டாளி மக்கள் கட்சியின் நிலைப்பாடு ஆகும். அந்த நோக்கத்தை நிறைவேற்ற சென்னை உயர்நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு துணை செய்யும். இந்தத் தீர்ப்பின் மூலம் நீதிமன்றங்கள் மீதான மக்களின் நம்பிக்கை அதிகரித்திருக்கிறது.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Updated On: 21 Dec 2023 8:40 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அருமையான தோழமைக்கு அன்பான பிறந்தநாள் வாழ்த்து
  2. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சியில் தினமும் பெய்யும் மழையால் மாயமானது அக்னி நட்சத்திர வெயில்
  3. கல்வி
    தமிழ்நாடு தொழிலாளர் கல்வி நிலையத்தில் பட்ட மற்றும் பட்டய படிப்புகள்
  4. லைஃப்ஸ்டைல்
    ஆரோக்கியத்தில் மந்திரி மாதிரி வாழணுமா? அடிக்கடி முந்திரி
  5. லைஃப்ஸ்டைல்
    தனக்கென வாழாமல் நமக்கென வாழும் தந்தைக்கு பிறந்தநாள் வாழ்த்து
  6. தமிழ்நாடு
    மணிக்கு 200 கி. மீ.வேகம்: பறக்கும் டாக்சி தயாரிக்கும் முயற்சியில்...
  7. லைஃப்ஸ்டைல்
    ருசியான சில்லி பரோட்டா செய்வது எப்படி?
  8. லைஃப்ஸ்டைல்
    குழம்பு மிளகாய் பொடி வீட்டிலேயே தயார் செய்வது எப்படி?
  9. திருச்சிராப்பள்ளி மாநகர்
    கை நழுவி போகிறதா? திருச்சி பஞ்சப்பூரில் அமைய உள்ள ஒலிம்பிக் அகாடமி
  10. ஆன்மீகம்
    தியாகத் திருநாளாம் பக்ரீத் வாழ்த்து சொல்லலாம் வாங்க