புதுக்கோட்டை அருகே கிணற்றில் மூழ்கி இளைஞர் உயிரிழப்பு

புதுக்கோட்டை அருகே கிணற்றில் மூழ்கி இளைஞர் உயிரிழப்பு
X

புதுக்கோட்டை அருகே கிணற்றில் குளித்த போது தலையில் அடிபட்டு தண்ணீரில் மூழ்கி இறந்துபோன ஆசாத்தின் பழைய புகைப்படம்.

புதுக்கோட்டை அருகே கிணற்றில் குளித்த போது தலையில் அடிபட்டு தண்ணீரில் மூழ்கி இளைஞர் உயிரிழந்தார்.

புதுக்கோட்டை அருகே கிணற்றில் குளித்த போது தலையில் அடிபட்டு தண்ணீரில் மூழ்கி கல்லூரி இளைஞர் பலி.

புதுக்கோட்டை மாவட்டம் புல்வயல் பகுதியைச் சேர்ந்தவர் அப்துல்லா. இவரது மகன் ஆசாத் (20) சென்னையில் இளங்கலைப் படிப்பு படித்து வந்துள்ளார். இந்த நிலையில் ரம்ஜான் பண்டிகைக்காக ஊருக்கு திரும்பிய ஆசாத், தனது நண்பர்களுடன் பெருமாநாடு பகுதியிலுள்ள விவசாய கிணற்றுக்கு தனது 4 நண்பர்களுடன் குளிக்க சென்றுள்ளார். அங்கு நண்பர்களுடன் கிணற்றில் குளித்துக் கொண்டிருந்த போது ஆசாத் கிணற்றுக்குள் பல்டி அடித்துள்ளார்.

அப்போது அவரது தலை பகுதி கிணற்றின் சுவர்ப் பகுதியில் எதிர்பாராத விதமாக மோதி உள்ளது. இதில் நிலைதடுமாறிய ஆசாத் கிணற்றுக்குள் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து அவரது நண்பர்கள் அளித்த தகவலின்படி சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற தீயணைப்பு துறையினர் உடலை மீட்டு புதுக்கோட்டை மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த அன்னாவாசல் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story