விராலிமலையில் அதிமுக எம்எல்ஏ விஜயபாஸ்கர் வெற்றியை எதிர்த்து நீதி மன்றத்தில் வழக்கு

விராலிமலையில் அதிமுக எம்எல்ஏ விஜயபாஸ்கர் வெற்றியை எதிர்த்து நீதி மன்றத்தில் வழக்கு
X

முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் வெற்றியை எதிர்த்து நீதி மன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை எம்எல்ஏ விஜயபாஸ்கர் வெற்றியை எதிர்த்து திமுக வேட்பாளர் சென்னை உயர் நீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் புதுக்கோட்டை மாவட்டத்தில் திமுக சார்பில் 4 இடங்களிலும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி காங்கிரஸ் தலா ஒரு இடத்திலும் போட்டியிட்டது

இதில் புதுக்கோட்டை மாவட்டத்தில் மிகவும் பரபரப்பாக இருந்த தொகுதியாக கருதப்பட்டது விராலிமலை தொகுதி. இந்த தொகுதியில் அதிமுக அரசில் தமிழக சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த விஜயபாஸ்கர் போட்டியிட்டார்.

அவரை எதிர்த்து திமுக வேட்பாளர் தென்னலூர் பழனியப்பன் இரண்டாவது முறையாக போட்டியிட்ட இந்த நிலையில் மே 2ஆம் தேதி தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படுவதற்கு முன்பே விராலிமலை தொகுதியில் சீல் வைக்கப்பட்ட வாக்கு இயந்திரத்தில் உள்ள டேப் வெளியிலே கிடந்தது என்று கூறியும் பல்வேறு குற்றச்சாட்டுகளை கூறி திமுக சார்பில் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் மனோ உமா மகேஸ்வரி டம் மனுக்களாக வழங்கினர்.

இந்த நிலையில் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் போதும் பல்வேறு கட்ட பிரச்சனைகள் ஏற்பட்டதை தொடர்ந்து விராலிமலை தொகுதியில் வாக்கு எண்ணிக்கையும் நிறுத்தப்பட்டு இருந்த நிலையில் மீண்டும் இரவு முதல் வாக்கு எண்ணிக்கை தொடர்ந்து மறுநாள் காலை வரை தொடர்ந்து வாக்கு எண்ணிக்கை எண்ணப்பட்டு பிறகு முடிவு அறிவிக்கப்பட்டது

அதில் அதிமுக சார்பில் போட்டியிட்ட முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் 23644 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது இந்த வெற்றியை எதிர்த்து இன்று திமுக சார்பில் போட்டியிட்ட தென்னலூர் பழனியப்பன் வாக்கு இயந்திரத்தில் குறிப்பிட்ட என்னும் ஆவணங்களில் உள்ள என்னும் மாறுபடுகிறது எனவே விஜயபாஸ்கர் வெற்றி பெற்றது சட்ட விரோதமானது என அறிவிக்க வேண்டும் என்று கூறி சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று வழக்கு தொடர்ந்து உள்ளதால் அதிமுக வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

Tags

Next Story
Weight Loss Tips In Tamil