அன்னவாசல் அருகே மயானத்திற்கு செல்ல பாதை அமைத்துத் தர கோரிக்கை

அன்னவாசல் அருகே மயானத்திற்கு செல்ல பாதை அமைத்துத் தர கோரிக்கை
X

இறந்தவரின் சடலத்தை கழுத்தளவு தண்ணீரில் தோளில் சுமந்தபடி எடுத்து செல்லும் கிராம மக்கள்  

மயானத்திற்கு செல்ல சாலை இல்லாததால் கழுத்தளவு நீரில் சடலத்தை சுமந்தபடி எடுத்து சென்று அடக்கம் செய்த கிராம மக்கள்

புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் அருகே உள்ள மேலப்பழுவஞ்சி மற்றும் கீழப்பழுவஞ்சி ஆகிய கிராமங்களில் சுமார் 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.

இந்த ஊரில் இருந்து சுமார் இரண்டரை கிலோ மீட்டர் தொலைவில் மயானம் உள்ள நிலையில், அதற்கு செல்வதற்கு பாதை இல்லாததால் கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக கருவேல காடுகள் மற்றும் மழைக்காலங்களில் கண்மாய் நீரை கடந்து மிகுந்த சிரமங்களுக்கிடையே கிராமத்தில் உயிரிழந்தவர்களின் சடலங்களை அப்பகுதி மக்கள் அடக்கம் செய்து வருகின்றனர்

இந்நிலையில் அந்த கிராமத்தைச் சேர்ந்த சிங்காரம் என்பவர் உடல் நலக்குறைவால் உயிரிழந்தார் ஆனால் மயானத்திற்கு செல்ல சாலை இல்லாததால் அவரது சடலத்தை தோளில் சுமந்தபடி மழையால் நிறைந்திருக்கும் கழுத்தளவ கண்மாய் நீரை கடந்து சென்று மயானத்தில் கிராம மக்கள் அடக்கம் செய்தனர்.

எனவே தமிழக அரசும் சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகளும் நடவடிக்கை எடுத்து மயானத்திற்கு செல்ல முறையான சாலை வசதி மற்றும் பாலம் அமைத்து தர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags

Next Story
நாமக்கல் மாவட்டத்தில் 2 விஏஓக்கள் திடீரென சஸ்பெண்ட்!