விஜயபாஸ்கர் சகோதரரின் உதவியாளர் வீட்டில் ஐடி ரெய்டு

விஜயபாஸ்கர் சகோதரரின் உதவியாளர் வீட்டில் ஐடி ரெய்டு
X

அமைச்சர் விஜயபாஸ்கரின் சகோதரருடைய உதவியாளர் வீட்டில் வருமான வரித்துறையினர் 10க்கும் மேற்பட்டோர் சோதனையிட்டு வருகின்றனர்.

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையில் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் சகோதரர் உதயகுமார் நடத்தும் கல்லூரியில் உதயகுமாரின் உதவியாளராக பணியாற்றி வரும் வீரபாண்டியன் என்பவரது வீட்டில் வருமான வரித்துறையினர் 10க்கும் மேற்பட்டோர் சோதனையிட்டு வருகின்றனர்.

இதில் வருமான வரித்துறையினர் சோதனை செய்து கொண்டிருக்கும் போது வீரபாண்டியன் வெளியில் வந்து நின்று கொண்டிருந்ததாகவும் அப்போது அவரது நண்பர் மணி என்பவர் வந்து செல்போன் கொடுத்ததாக தெரிகிறது. சோதனையில் ஈடுபட்ட அலுவலர் ஒருவர் அதனை பார்த்து அவரது நண்பரின் செல்போனை பிடுங்கி சோதனை செய்தார். திருச்சி மண்டல வருமான வரித் துறை துணை ஆணையர் அனுராதா தலைமையில் பத்துக்கும் மேற்பட்டவர்கள் தொடர்ந்து சோதனை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!