வரும்முன்காப்போம் திட்டம்: சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தொடக்கம்

வரும்முன்காப்போம் திட்டம்: சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தொடக்கம்
X

விராலிமலை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில்கலைஞரின் வருமுன் காப்போம் திட்ட மருத்துவ முகாமினை சட்டத்துறை அமைச்சர் ரகுபதி துவக்கி வைத்து பார்வையிட்டார்.

இந்தியாவில் வேறு எந்தமாநிலத்திலும் இல்லாத வகையில் சுகாதாரத்துறையில் பல்வேறு முன்மாதிரித்திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்

தமிழ்நாடு முதலமைச்சர் சுகாதாரத் துறையில் முன்மாதிரி திட்டங்களை செயல்படுத்தி வருகிறார் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி பேச்சு.

புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் மாவட்ட ஆட்சித்தலைவர் கவிதா ராமு தலைமையில் நடைபெற்ற கலைஞரின் வருமுன் காப்போம் திட்ட மருத்துவ முகாமினை சட்டத்துறை அமைச்சர் ரகுபதி துவக்கி வைத்து பார்வையிட்டார்.

பின்னர் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி பேசியதாவது: கிராமப்புறங்களில் உள்ள ஏழை, எளிய பொதுமக்கள் தங்களுக்கு ஏற்படும் நோய்களை முன்கூட்டியே கண்டறிந்து குணப்படுத்தும் வகையில் முன்னாள் முதலமைச்சர் கலைஞரால் ஏற்கனவே கொண்டு வரப்பட்ட திட்டம் கலைஞரின் வருமுன் காப்போம் திட்டமாகும். அந்த வகையில் பொதுமக்களின் உடல் நலனில் மிகுந்த அக்கரைகொண்டு செயல்பட்டு வரும்.

தமிழ்நாடு முதலமைச்சர் மக்கள் நல்வாழ்வினை உறுதி செய்திடும் வகையில் கலைஞரின் வருமுன் காப்போம் திட்டம் மூலம் மருத்துவ முகாம்கள் மீண்டும் புதுப்பொழிவுடன் நடத்த உத்தரவிட்டு புதுக்கோட்டை மாவட்டத்தில் தொடர்ந்து முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது.

அதனடிப்படையில், விராலிமலை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் கலைஞரின் வருமுன் காப்போம் திட்ட மருத்துவ முகாம் துவக்கி வைக்கப்பட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் வட்டாரத்திற்கு 3 முகாம்கள் வீதம் 39 மருத்துவ முகாம்கள் நடத்தப்படவுள்ளது. இதில் புதுக்கோட்டை சுகாதார மாவட்டத்தில் 7 முகாம்களும், அறந்தாங்கி சுகாதார மாவட்டத்தில் 4 முகாம்களும் எனஇதுவரை 11 முகாம்கள் நடத்தி முடிக்கப்பட்டு, இம்முகாமில் மொத்தம் 4,377 நபர்கள் பயன்பெற்றுள்ளனர். அதேபோன்று 12-வது மருத்துவ முகாம் நடைபெற்று வருகிறது.

இம்முகாமில் சிறப்பு மருத்துவக் குழுவினர்களால் பொதுமக்களுக்கு குழந்தை நலம், பல் மருத்துவம், கண், காது, மூக்கு, தொண்டை, இருதய நோய், நீரிழிவு நோய், புற்றுநோய், காசநோய், மகப்பேறு மருத்துவம், சித்த மருத்துவம், மனநல ஆலோசனை போன்ற பல்வேறு துறைகளில் மருத்துவ சிகிச்சைகள் மற்றும் ஆலோசனைகள் வழங்கப்படுகிறது.எனவே இம்மருத்துவ முகாமில் பொதுமக்கள் அதிகளவில் கலந்துகொண்டு பயன்பெற வேண்டும்.

தமிழக அரசு அறிவித்துள்ள மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின்கீழ் தொற்றாநோயாளிகளுக்கு அவர்களது இல்லங்களுக்கே நேரடியாக சென்று 2 மாதங்களுக்கு தேவையான மாத்திரைகள் வழங்கப்படுவதுடன், பிசியோதெரபி உள்ளிட்ட சிகிச்சைகளும் வழங்கப்படுகிறது. கலைஞரின் வருமுன் காப்போம் திட்டத்தின் மூலம் கிராமப்புறங்களில் மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு பொதுமக்களுக்கு ஏற்படும் நோய்களை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து குணப்படுத்த வாய்ப்பாக அமைந்துள்ளது.

தமிழ்நாடு முதலமைச்சர் துவக்கி வைக்கப்பட்ட 'இன்னுயிர் காப்போம் - நம்மைக் காக்கும் 48 திட்டம்" மூலம் சாலை விபத்தால் ஏற்படும் உயிரிழப்பை குறைத்திட, விபத்து ஏற்பட்ட முதல் 48 மணி நேரத்திற்குள் கட்டணமில்லா உயிர் காக்கும் அவசர சிகிச்சைக்கு நபர் ஒருவருக்கு ரூ.1 லட்சம் வரை அரசே ஏற்கும் என அறிவித்துள்ளார்.

இதனால் எதிர்பாராத விதமாக விபத்துகள் ஏற்படும் பொழுது எண்ணற்ற விலைமதிப்பற்ற மனித உயிர்கள் காப்பாற்றப்படும். மேலும், விபத்தில் காயமடைந்தவர்களை சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கும் நபருக்கு ரூ.5,000 ஊக்கத்தொகை வழங்கப்படும் என்கின்ற சிறப்பான திட்டத்தையும் அறிவித்துள்ளார். இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் தமிழ்நாடு முதலமைச்சர் சுகாதாரத்துறையில் இதுபோன்ற பல்வேறு முன்மாதிரித் திட்டங்களை செயல்படுத்தி வருகிறார் என்றார் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி பேசினார்.

இதில், முன்னாள் அரசு வழக்கறிஞர் செல்லபாண்டியன் ,வருவாய் கோட்டாட்சியர் தண்டாயுதபாணி, துணை இயக்குநர் (சுகாதாரப் பணிகள்) அர்ஜுன்குமார், ஒன்றியக்குழுத் தலைவர் மணி, .ஒன்றியக் குழு உறுப்பினர் சத்தியசீலன், வட்டாட்சியர் சரவணன் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.

Tags

Next Story
தினம் 1 ! வேகவைத்த முட்டை சாப்பிட்டால் உடம்புக்கு அவ்வளவு சத்துக்கள்  கிடைக்கும் ... வேறென்ன வேணும்...! | Egg benefits in tamil