வேன் டயர் கழன்று ஓடியதால் சொகுசு கார் கவிழ்ந்து விபத்து : 2 பேர் பலி

வேன் டயர்  கழன்று ஓடியதால் சொகுசு கார் கவிழ்ந்து விபத்து : 2 பேர் பலி
X

டயர் கழன்ற பின்னும் நிலையற்று  தடுமாறி நிற்கும் வேன்.

வேன் டயர் கழன்று ஓடியதால் தடுமாறிய சொகுசு கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 2 பேர் பலியானார்கள்.

புதுக்கோட்டை மாவட்டம் மாத்தூர் அருகே ஆலங்குடியில் இருந்து திருச்சி நோக்கி காரில் ஆரோக்கிய மலர்விழி மற்றும் குடும்பத்தார்கள் சென்று கொண்டிருந்தனர். அப்பொழுது மாத்தூர் தேசிய நெடுஞ்சாலை அருகே திருச்சியில் இருந்து புதுக்கோட்டைக்கு வந்து கொண்டிருந்த மினி வேன் டயர் திடீரென கழன்று சாலையில் ஓடியது.

இதனை சற்றும் எதிர்பாராமல் இருந்த கார் ஓட்டுநர் சாலையில் உருண்டு வரும் டயரின் மீது மோதாமல் இருப்பதற்கு காரை திருப்பியபோது கார் நிலை தடுமாறி தேசிய நெடுஞ்சாலை பள்ளத்தில் தலைகுப்புற கவிழ்ந்தது. இந்த விபத்தில் சொகுசு காரில் சென்ற ஆலங்குடி பகுதியைச் சேர்ந்த ஆரோக்கிய மலர்விழி, மற்றும் லேனா பால் இனிக்கோமேரி ஆகிய இரண்டு பெண்கள் சம்பவ இடத்திலேயே பலியானார்கள்.


காயங்களுடன் காருக்குள் இருந்த மற்றவர்களை அருகிலிருந்தவர்கள் மீட்டு திருச்சி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இறந்தவர்களின் உடலும் பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த சம்பவம் குறித்து மாத்தூர் காவல் துறையினர் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த விபத்து அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


Tags

Next Story
ஈரோடு வீட்டுவசதி வாரிய அலுவலகம் இடமாற்றம் - பொதுமக்கள் வசதிக்காக புதிய இடத்தில் செயல்பாடு