அன்னவாசல் அருகே கண்மாயில் ஒரே நேரத்தில் பிடிபட்ட மூன்று மலைபாம்புகள்

அன்னவாசல் அருகே கண்மாயில் ஒரே நேரத்தில் பிடிபட்ட மூன்று மலைபாம்புகள்
X

புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் அருகே கண்மாயில் மூன்று மலைபாம்புகள் ஒரே நேரத்தில் பிடிபட்டது

புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் அருகே கண்மாயில் மூன்று மலைபாம்புகள் ஒரே நேரத்தில் பிடிபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது

புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் அருகே உள்ள விசலூர் விஷலி கண்மாய் புதுக்குளக் கறை முற்புதற்க்குள் 3 மலைப்பாம்புகள் இருந்துகொண்டு பொதுமக்களை அச்சுறுத்துவதாக அப்பகுதி பொதுமக்கள் இலுப்பூர் தீயணைப்புதுறையினருக்கு தகவல் அளித்தனர்.

பின்னர் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த இலுப்பூர் தீயணைப்புதுறை நிலைய அலுவலர் கணேசன் தலைமையிலான தீயணைப்பு துறையினர் இரண்டுமணி நேர போராட்டத்திற்கு பின்பு 3 மலைப்பாம்பையும் பிடித்து சாக்குபையில் அடைத்து வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.

பின்னர் பிடிபட்ட 3 மலைப்பாம்புகளையும் தீயணைப்புதுறையினர் வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர். 3 மலைப்பாம்புகளும் நார்த்தாமலை காப்புகாட்டில் விடப்பட்டது ஒரே இடத்தில் 3 மலைப்பாம்பு பிடிபட்ட சம்பவம் அறிந்த சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த திரளான பொதுமக்கள் திரன்டதாள் பரபரப்பு ஏற்பட்டது

இதேபோல் அன்னவாசல் அருகே முக்கண்ணாமலைப்பட்டி ஏடி காலணியை சேர்ந்த சுரேஷ் என்பவர் வீட்டுதோட்டத்தில் புகுந்த பாம்பை அப்பகுதி இளைஞர்கள் பிடித்து வனப்பகுதியில் விட்டனர்.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!