மழைக்காலங்களில் ஏற்படக்கூடிய நோய்கள் பற்றி சித்த மருத்துவர் அறிவுரை

மழைக்காலங்களில் ஏற்படக்கூடிய நோய்கள் பற்றி   சித்த மருத்துவர் அறிவுரை
X

மண்டையூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சித்த மருத்துவர் சண்முகப்பிரியா ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் குழந்தைகளுக்கு கபசுரக் குடிநீர் வழங்கினார்

மழைக் காலங்களில் எவ்வாறு நோய்கள் ஏற்படும் நோய்கள் ஏற்பட்டால் என்னென்ன தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென விளக்கமளித்தார்

மழைக்காலங்களில் ஏற்படக்கூடிய நோய்களைப் பற்றி மாணவ மாணவிகளுக்கு சித்த மருத்துவர் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியதை அடுத்து, கடந்த 15 நாட்களுக்கு மேலாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் பொதுமக்களுக்கு மழைக்காலங்களில் ஏற்படக்கூடிய நோய்களை தடுக்கும் விதத்தில் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் மழைக்கால மருத்துவ முகாமை நடத்தி வருகிறது.

அதேபோல் தற்போது பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ளதால், மழைக்காலங்களில் ஏற்படக்கூடிய நோய்கள் குறித்து மாணவ, மாணவிகளிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதத்தில், புதுக்கோட்டை மாவட்டத்தில் பல்வேறு தொகுதிகளில் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் சிறப்பு நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனர்.

புதுக்கோட்டை மாவட்டம் ,விராலிமலை சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட மண்டையூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தின் சித்தமருத்துவர் சண்முகப்பிரியா, மண்டையூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு மழைக்காலங்களில் ஏற்படக்கூடிய நோய்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி, பெற்றோர்களுக்கு மழைக் காலங்களில் எவ்வாறு நோய்கள் ஏற்படும் நோய்கள் ஏற்பட்டால் என்னென்ன தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்பது குறித்தும் விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.

மேலும் பள்ளியில் படிக்கும் மாணவ மாணவிகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கக் கூடிய கபசூசுர குடிநீர் வழங்கினார்.இந்த நிகழ்வில் ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
பழனி கோயில் நிர்வாகம் 3,134 மூட்டைகள் கரும்பு சா்க்கரை கொள்முதல் செய்தது