இலுப்பூர் தனியார் கல்லூரியில் சர்வர்கோளாறு: ஆன்லைன்தேர்வு எழுத வந்தவர்கள் தர்னா
இலுப்பூரில் மதர் தெரசா கல்லூரியில் சர்வர் பிரச்சனை காரணமாக தேர்வு எழுத முடியாமல் போனதால் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட தேர்வு எழுத வந்தவர்கள்
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் சார்பில் நடத்தப்படும் நிர்வாக பதவிக்கான துறை தேர்வு இன்று தமிழகம் முழுவதும் நடைபெற்று வருகிறது.
புதுக்கோட்டை மாவட்டத்தில் 7 தேர்வு மையங்களில் நடைபெறும் தேர்வில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட அனைத்து துறையில் பணியாற்றும் தேர்வாளர்கள் தேர்வு எழுதி வருகின்றனர். புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூரில் உள்ள மதர் தெரசா பொறியியல் கல்லூரியில் இன்று நடைபெற இருந்த தேர்வில் 150 தேர்வாளர்கள் பங்கேற்பதற்காக வந்தனர்.
ஆனால், சர்வர் பிரச்னை காரணமாக தேர்வு எழுத முடியாத சூழல் உருவானதையடுத்து தேர்வு எழுத வந்த 150 தேர்வாளர்கள் தேர்வு மைய முன்பு தர்னா போராட்டத்தில் ஈடுபட்டனர். காலை 9.30 மணி முதல் அனைவரும் தர்னா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து அங்கு வந்த இலுப்பூர் வருவாய் கோட்டாட்சியர் தண்டாயுதபாணி, கல்வித்துறை அதிகாரிகள் மற்றும் தேர்வுத்துறை பார்வையாளர் ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
திருச்சியில் உள்ள தனியார் கல்லூரியில் இன்றைய தேர்வை எழுதுவதற்கு வழிவகை செய்வதாகும் அதற்கான பேருந்து வசதிகளையும் செய்து கொடுப்பதாகவும் தேர்வுத்துறை அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால் இதனை ஏற்காத தேர்வாளர்கள் தொடர்ந்து அங்கு தர்னா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தாங்கள் தேர்வு எழுத தயாராக இருப்பதாகவும் ஆனால் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள ஏதாவது ஒரு தேர்வு மையத்தில் தேர்வு எழுத வழி வகை செய்ய வேண்டும் எனவும் அதிகாரிகளிடம் தேர்வு எழுத வந்தவர்கள் கோரிக்கை விடுத்தனர்.
அதற்கான நடைமுறை சாத்தியம் இல்லாத காரணத்தினால் தேர்வை மறு தேதியில் வைப்பதற்கு தேர்வுத்துறை நடவடிக்கை எடுக்கும் எனவும் இன்று வந்தவர்கள் அனைவரும் வருகை பதிவேட்டை பதிவிட்டு செல்லுமாறு அதிகாரிகள் வாக்குறுதி அளித்தையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள். இதற்கு சம்மதம் தெரிவித்து தற்போது வருகை பதிவேட்டில் கையொப்பமிட்டு தர்னா போராட்டத்தை கைவிட்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu