அன்னவாசல் பகுதியில் மணல் கடத்தலில் ஈடுபட்ட வண்டிகள் பறிமுதல்

அன்னவாசலில் மண்ல் திருட்டில் ஈடுபட்ட டிராக்டர்,, மாட்டுவண்டிகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் காவல் நிலையத்திற்குட்பட்ட குடுமியான்மலை, பரம்பூர், கிளிக்குடி, கோண குறிச்சிப்பட்டி ,பகுதிகளில் மணல் திருட்டு தடுப்பு தொடர்பாக துணைத் காவல் கண்காணிப்பாளர் அருள்மொழி அரசு உத்தரவின்படி ஆய்வாளர் சந்திரசேகரன் தலைமையிலான தனிப்படையினர்.

சோதனையில் மணல் திருட்டில் ஈடுபட்ட சுமார் 1/4 யூனிட் மணலுடன் கூடிய இரண்டு மாட்டு வண்டிகள் மற்றும் 1 யூனிட் மணலுடன் ட்ராக்டர் டிப்பர் ஒன்றும் கைப்பற்றப்பட்டு அன்னவாசல் காவல்நிலையத்தில் வழக்குபதிவு செய்து மணல் திருட்டுக்கு எதிராக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

Tags

Next Story
அதிமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட மக்கள் நலத் திட்டங்களை விளக்கி ராசிபுரத்தில் பிரசாரம்-முன்னாள் அமைச்சா் பி.தங்கமணி