அன்னவாசல் கீழகுறிச்சியில் எம்பி அப்துல்லாவிற்கு பள்ளி குழந்தைகள் வரவேற்பு

அன்னவாசல் கீழகுறிச்சியில் எம்பி அப்துல்லாவிற்கு பள்ளி குழந்தைகள் வரவேற்பு
X

அன்னவாசல் அருகே தனியார் பள்ளி நிகழ்ச்சிக்கு சென்ற மாநிலங்களவை எம்பி அப்துல்லாவிற்கு பூ கொடுத்து பள்ளி குழந்தைகள் வரவேற்றனர்.

அன்னவாசல் கீழ குறிச்சியில் தனியார் பள்ளி நிகழ்ச்சிக்கு வந்த எம்பி அப்துல்லாவிற்கு பூ கொடுத்து வரவேற்ற பள்ளி குழந்தைகள்.

தனியார் பள்ளி நிகழ்ச்சிக்கு சென்ற மாநிலங்களவை எம்பி அப்துல்லாவிற்கு பூ கொடுத்து வரவேற்ற பள்ளி குழந்தைகள்.

திமுக சார்பில் மாநிலங்களவை எம்பியாக பொறுப்பேற்ற புதுக்கோட்டையைச் சேர்ந்த எம் பி எம்எம் அப்துல்லா டெல்லியில் நாடாளுமன்ற கூட்டத்தொடர் நடைபெறும் நேரங்களில் டெல்லியில் நாடாளுமன்ற கூட்டங்களில் பங்கேற்று இந்திய அளவில் ஏற்படும் பிரச்சனைகள் குறித்தும் தமிழகத்திற்கு தேவையான பல்வேறு திட்டங்கள் குறித்தும் தொடர்ந்து தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் பொதுமக்கள் வைக்கும் கோரிக்கைகளையும் மாநிலங்களவையில் பேசி அதற்கான தீர்வுகளையும் ஏற்படுத்தி வருகிறார்.

அதேபோல் நடைபெற்று முடிந்த நாடாளுமன்ற கூட்டத்தில் அகில இந்திய அளவில் அதிக அளவில் விவாதங்கள் பங்கேற்ற முதல் எம்பி என தேர்ந்தெடுக்கப்பட்ட எம்பி அப்துல்லாவிற்கு தமிழக முதலமைச்சர் மற்றும் திமுக நிர்வாகிகள் அமைச்சர்கள் என பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் புதுக்கோட்டை மாவட்டத்திற்கு வருகை தந்தால் கட்சி நிர்வாகி இல்ல திருமண நிகழ்வுகள் உள்ளிட்ட கட்சி நிகழ்வுகளில் அதிக அளவில் பங்கேற்பது மேலும் அந்தந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் வைக்கும் கோரிக்கைக்கு ஏற்ப தனது மாநிலங்களவை எம்பி நிதியில் இருந்து பல்வேறு திட்டங்களுக்கு நிதி ஒதுக்குவது என பல்வேறு பணிகளை மேற்கொண்டுவருகிறார்.

அதன்படி இன்று புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் கீழ குறிச்சியில் உள்ள எம்எஸ்ஏ தனியார் பள்ளியின் ஒன்பதாம் ஆண்டு விருது வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொல்லச் சென்ற எம்பி அப்துல்லாவிற்கு பள்ளி குழந்தைகள் பூக்கள் கொடுத்து எம்பி அப்துல்லாவை வரவேற்றனர். மேலும் பள்ளியின் ஒன்பதாம் ஆண்டு விருது வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்டு அனைவருக்கும் விருதுகளை வழங்கி சிறப்பித்தார். இந்த நிகழ்வில் பள்ளி நிர்வாகிகள் மற்றும் திமுக நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!