அன்னவாசலில் நடைபெற்ற மரக்கன்றுகள் நடும் மாபெரும் நிகழ்வு

அன்னவாசலில் நடைபெற்ற மரக்கன்றுகள் நடும் மாபெரும்  நிகழ்வு
X

அன்னவாசலில் மாபெரும் மரக்கன்றுகள் நடும் நிகழ்வு நடைபெற்றது.


மரங்களின் இன்றியமையாமை மற்றும் பயன்பாடு, மரங்களின் வகைகள், அதன் இயற்கை குணாதிசயங்கள் போன்ற தகவல்கள் எடுத்துரைக்கப்பட்டது

புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் ஒன்றியம், வீரப்பட்டி ஊராட்சி, தாண்டிஸ்வரம் சத்குருநாதர் கோயிலில் இன்று மாபெரும் மரக்கன்று நடவு செய்யும் விழா நடைபெற்றது.

நிகழ்வுக்கு அறக்கட்டளை நிறுவனர் மரம் ராஜா நிகழ்வுக்கு தலைமை வகித்தார். ஊராட்சியின் கிராம நிர்வாக அலுவலர் ராமர் முன்னிலை வகித்தார். தலைமை அழைப்பாளராக வீரப்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் அழகுபாண்டியன் மற்றும் அன்னவாசல் ஒன்றிய கவுன்சிலர் திமுக மாவட்ட பிரதிநிதி சண்முகம் ஆகியோர் பங்கேற்று மரக்கன்றுகளை நடவு செய்தனர்.

நிகழ்வில் மரம் அறக்கட்டளையின் நிறுவனர் மரம் ராஜா மரங்களின் இன்றியமையாமை மற்றும் பயன்பாடு, மரங்களின் வகைகள், அதன் இயற்கை குணாதிசயங்கள் போன்ற தகவல்களை, அனைவரும் புரிந்து கொள்ளும்படி எளிமையாக எடுத்துரைத்தார். முன்னதாக தாய்மை நண்பர்கள் மன்ற தலைவர் கோபிமணி வரவேற்றார். தாய்மை நண்பர்கள் தினேஷ்குமார் மற்றும் முத்துமாரி நன்றி தெரிவித்தனர். நிகழ்ச்சியை, காலாடிப்பட்டி தாய்மை நண்பர்கள் இளைஞர் நற்பணி மன்றம் மற்றும் மரம் அறக்கட்டளையினர் ஏற்பாடு செய்தனர்.



Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!