புதுக்கோட்டையில் தொடர் மழையினால் கலையிழந்த ஊரக உள்ளாட்சி தேர்தல்

தெர்மல் ஸ்கேனர் மூலம் பரிசோதனை செய்து கிருமி நாசினி மருந்துகள் கையுறைகள் முக கவசம் வழங்கி உள்ளே அனுமதிக்கப்படுகின்றனர்

புதுக்கோட்டையில் தொடர் மழையினால் கலையிழந்த ஊரக உள்ளாட்சி தேர்தல்.

தமிழகத்தில் 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தலில் வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு துவங்கியது. அதன் ஒரு பகுதியாக, புதுக்கோட்டை மாவட்டத்திலும் 14 இடங்களுக்கு மாவட்ட ஊராட்சி உறுப்பினர் ஊராட்சி மன்ற தலைவர்கள் உள்ளிட்ட பல்வேறு பதவிகளுக்கு தேர்தல் நடைபெற்று வருகிறது.

இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு துவங்கியது. புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட ஒன்பதாவது வார்டு மாவட்ட ஊராட்சி தேர்தல் நடைபெற்று வரும் கீழ பழவஞ்சி, பெருமநாடு ஆகிய கிராமங்களில் உள்ள அரசு பள்ளிகளில் தேர்தல் நடைபெற்று வருகிறது. நேற்று இரவு முதல் இன்று காலை வரை விடிய விடிய தொடர் மழை பெய்து வருவதால், புதுக்கோட்டை மாவட்டத்தில் நடைபெற்று வரும் ஊரக உள்ளாட்சி தேர்தல் தற்போது கலையிழந்து காணப்படுகிறது. தொடர் மழையினால் பொதுமக்கள் ஆர்வத்துடன் வாக்களிக்க வராததால், காலையில் துவங்கிய வாக்குப்பதிவில் வாக்களிப்பதற்காக பொதுமக்கள் வராததால் பல வாக்குச்சாவடிகளில் வெறிச்சோடி காணப்பட்டது.



குறிப்பாக பெருமநாடு வாக்குச்சாவடியில் பொதுமக்கள் ஒருவர் பின் ஒருவராக வாக்கு அளிக்க வருகின்றனர். வாக்களிக்க வரும் பொதுமக்களுக்கு அதிகாரிகள் தெர்மல் ஸ்கேனர் மூலம் பொதுமக்களுக்கு பரிசோதனை செய்தும் மற்றும் கிருமி நாசினி மருந்துகள் கையுறைகள் முக கவசம் வழங்கி வாக்களிப்பதற்கு உள்ளே அனுமதிக்கின்றனர். தொடர் மழையினால், காலை நேரத்தில் புதுக்கோட்டை மாவட்டத்தில் நடைபெறும் ஊரக உள்ளாட்சி தேர்தல் சற்று கலையிழந்து காணப்படுகிறது. பெருமநாடு பகுதியில் நடைபெறும் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற்று வரும் வாக்குச்சாவடியில் காவல்துறையினர் பலத்த பாதுகாப்புடன் கேமரா மூலம் வாக்குப்பதிவு பதிவு செய்யப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.


Tags

Next Story
மக்களின் உயர்தர மருத்துவ சேவைக்கான முன்முயற்சி - நாமக்கல் ஆட்சியரின் முக்கிய அறிவுறுத்தல்