வெற்றிலை பாக்கு, பழம் வைத்து பேருந்து ஓட்டுநர்களுக்கு பொதுமக்கள் வேண்டுகோள்
புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை பேருந்து நிலையத்தில் ட்ரம் செட் இசைத்து வெற்றிலை பாக்கு பழம் வைத்து பேருந்து ஓட்டுநர்களுக்கு பொதுமக்கள் வேண்டுகோள்.
ட்ரம் செட் இசைத்து வெற்றிலை பாக்கு பழம் வைத்து பேருந்து ஓட்டுநர்களுக்கு பொதுமக்கள் வேண்டுகோள்.
புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை சந்தைப்பேட்டை அருகே சுமார் 3.18 கோடி மதிப்பீட்டில் புதிய பேருந்து நிலையம் கட்டப்பட்டு கடந்த 2016 ஆம் ஆண்டு திறக்கப்பட்டது.
12 வணிக கடை உள்ளிட்ட பல்வேறு வசதிகளுடன் திறக்கப்பட்ட பேருந்து நிலையத்திற்குள் திறக்கப்பட்ட நாள் முதலே பேருந்துகள் வந்து செல்வதில்லை என்ற குற்றச்சாட்டு பொதுமக்கள் மத்தியில் கூறப்பட்டு வந்தது. சென்னை டூ கன்னியாகுமரி சாலையில் உள்ள விராலிமலை வழியாக 234 அரசு பேருந்துகள் மற்றும் 16 தனியார் பேருந்துகள் தினமும் இந்த வழித்தடத்தில் இயங்கப்படுகின்றன.
இவ்வாறாக இயக்கப்படும் பேருந்துகளில் ஒரு சில நகர பேருந்துகளை தவிர மற்ற பேருந்துகள் பேருந்து நிலையத்திற்குள் சென்று பயணிகளை ஏற்றி செல்லாமலும் பேருந்து நிலையத்தில் பயணிகளை இறக்கி விடாமலும் நெடுஞ்சாலை வழியாக சாலை வழியாகவே சென்று விடுகின்றனர். அதிலும் ஒரு சில பேருந்துகள் ஊருக்குள் வராமலேயே புறவழிச்சாலையில் பயணிக்கின்றன.
இதனால் பேருந்துக்காக பயணிகள் நீண்ட நேரம் பஸ் ஸ்டாண்டில் காத்திருக்கும் அவலம் விராலிமலையில் தொடர்கிறது. இந்த நிலையில் பேருந்து பயணிகள் நல சங்கம் மற்றும் சமூக நல அமைப்பினர் ஒன்றிணைந்து பேருந்து நிலையம் முன்பாக திரண்டு நின்று டிரம் செட் அடித்து, ஓட்டுனர், நடத்துனர்களுக்கு வெற்றிலை பாக்கு பழம் தட்டில் வைத்து இனிப்புகள் மற்றும் நினைவு பரிசாக மரக்கன்றுகளை வழங்கி தயவுசெய்து பேருந்து நிலையத்திற்குள் பேருந்துகளை இயக்கி பயணிகளை ஏற்றி இறக்கி செல்லுமாறு கைகூப்பி வணங்கி கேட்டுக் கொண்டனர். இந்த சம்பவம் காண்போருக்கு நெகிழ்வை ஏற்படுத்தியது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu