ஒரு ரூபாய் கூட லஞ்சம் வாங்காமல் அனைத்து திட்டங்களும் நிறைவேற்றப்படும்: அமைச்சர் பேச்சு

ஒரு ரூபாய் கூட லஞ்சம் வாங்காமல் அனைத்து திட்டங்களும் நிறைவேற்றப்படும்: அமைச்சர் பேச்சு
X

புதுக்கோட்டை கீழபழுவஞ்சி கிராமத்தில் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரித்து பேசிய அமைச்சர் மெய்யநாதன்

பொதுமக்கள் வழங்கியுள்ள கோரிக்கை மனுக்களை அனைத்தையும் உடனடியாக நிறைவேற்றித் தருவதற்கு அனைத்து நடவடிக்கை மேற்கொள்வேன்

ஒரு ரூபாய் கூட லஞ்சம் வாங்காமல் அனைத்து திட்டங்களை நிறைவேற்றி தரப்படும் என்றார் சுற்றுச்சூழல்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன்.

தமிழகத்தில் ஒன்பது மாவட்டத்திற்கு ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அதில் புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் ஒன்பதாவது வார்டு மாவட்ட ஊராட்சி பதவிக்கு திமுக சார்பில் பழனிச்சாமி போட்டியிடுகிறார். அவருக்கு ஆதரவாக இன்று தமிழக சுற்றுச்சூழல் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் சிவ.வீ. மெய்யநாதன், புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட கீழபழுவஞ்சி கிராமத்தில் அப்பகுதியில் உள்ள பொதுமக்களிடம் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்.

அப்போது கூடியிருந்த நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் தங்கள் பகுதிக்கு தேவையான கோரிக்கைகளை மனுவாக அமைச்சர்களிடம் கொடுத்தனர். அனைத்து பொதுமக்களிடமும் மனுக்களை பெற்றுக் கொண்டு திமுக வேட்பாளர் வெற்றி பெற்றவுடன் இந்த மக்களுக்கான அனைத்து நடவடிக்கைகளையும் அதிகாரிகள் துணையுடன் உங்கள் பகுதிகள் நிறைவேற்றித் தருவேன் என வாக்குறுதி அளித்து மேலும் பேசியதாவது: அப்போது நான் திமுகவில் பல்வேறு பொறுப்புகளை வகித்து வருகின்றேன். சாதாரண ஒரு தொண்டனுக்கு இரண்டு முறை சட்டமன்ற உறுப்பினராகும் தற்போது வாய்ப்பு வழங்கப்பட்டது. தற்போது பொறுப்பேற்ற முதல்வர் ஸ்டாலின் தலைமையில் அமைச்சராக பணியாற்றவும் எனக்கு வாய்ப்பு அளித்துள்ளார்.

எனவே ,பொதுமக்கள் வழங்கியுள்ள கோரிக்கை மனுக்களை அனைத்தையும் உடனடியாக நிறைவேற்றித் தருவதற்கு அனைத்து நடவடிக்கை மேற்கொள்வேன். தற்போது அமைந்துள்ள திமுக அரசு சார்பில் அறிவிக்கப்படும் திட்டங்களை, பொதுமக்களிடம் ஒரு பைசா லஞ்சம் வாங்காமல் நிறைவேற்றித் தருவேன். கடந்த பத்தாண்டுகளில் அதிமுக அரசு எந்த திட்டங்களையும் நிறைவேற்றவில்லை. திமுக தலைவர் தமிழக முதல்வராக பொறுப்பேற்ற நான்கு மாதங்களில், பல்வேறு திட்டங்களை நிறைவேற்றி உள்ளார். தமிழக முதல்வரை ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சி என அனைத்துக் கட்சிகளும் பாராட்டி வருகின்றனர்.

எனவே, நடைபெறவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடும் பழனிச்சாமியை வெற்றி பெறச் செய்தால், உங்கள் பகுதிக்கு அனைத்து திட்டங்களையும் நிறைவேற்றித்தர உதவியாக உங்களுக்கு இருப்பார் என்றார். இந்நிகழ்வில், மாநிலங்களவை எம்பி எம்.எம். அப்துல்லா, வடக்கு மாவட்ட பொறுப்பாளர் கே.கே.செல்லபாண்டியன், ஒன்றியச் செயலாளர் சந்திரன், சொத்து பாதுகாப்பு குழு உறுப்பினர் த.சந்திரசேகரன், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் சண்முகம், திமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.


Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!