காவல்துறையினர் தலைக்கவசம் கண்டிப்பாக அணிய வேண்டும்: புதுக்கோட்டை எஸ்பி உத்தரவு.

காவல்துறையினர் தலைக்கவசம் கண்டிப்பாக அணிய வேண்டும்: புதுக்கோட்டை எஸ்பி உத்தரவு.
X
காவல்துறையினர் இருசக்கர வாகனத்தில் செல்லும் போது தலைக்கவசம் கண்டிப்பாக அணிய வேண்டும் என்று புதுக்கோட்டை எஸ்பி உத்தரவிட்டுள்ளார்

புதுக்கோட்டை மாவட்டம் மாத்தூர் மற்றும் மண்டையூர் காவல் நிலையங்களில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நிஷா பார்த்திபன் ஆய்வு செய்தார். அப்போது அங்கு பராமரிக்கப்படும் கோப்புகள், துப்பாக்கி கிடங்கு மற்றும் காவல் நிலையங்களில் உள்ள குடிநீர் வசதி, கழிவறை ஆகியவற்றை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

தொடர்ந்து அவர் போலீசாரிடம் பேசும்போது காவல் நிலைய சுற்றுப்புறங்களை தூய்மையாக வைத்திருக்கவேண்டும் மோட்டார் சைக்கிளில் பயணிக்கும் போது அனைவரும் கட்டாயம் தலைக்கவசம் அணிய வேண்டும். வாகன ஓட்டிகளுக்கும், பொதுமக்களுக்கும் கொரோனா நோய்தொற்று பற்றிய விழிப்புணர்வை எடுத்துரைத்து கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என்றார். பின்னர் போலீசாரின் குறைகளை கேட்டறிந்தார்.

அப்போது கீரனூர் துணை காவல் கண்காணிப்பாளர் சிவசுப்பிரமணியன் மற்றும் மாத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கோபாலகிருஷ்ணன், மாத்தூர்,மண்டையூர் காவல் உதவி ஆய்வாளர்கள், போலீசார் உடனிருந்தனர்.

Tags

Next Story
மாஜி அதிமுக பொறுப்பாளர் வாபஸ், செந்தில்முருகன் விளக்கம்