புன்னகை அறக்கட்டளை சார்பில் குளக்கரையில் 2000 பனை விதைகள் நடும் பணி

புன்னகை அறக்கட்டளை சார்பில் குளக்கரையில் 2000 பனை விதைகள் நடும் பணி
X

புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் பகுதியில் புன்னகை அறக்கட்டளை சார்பில் பனை விதை நடும் நிகழ்வு நடைபெற்றது

வாரம் தோறும் ஒவ்வொரு பகுதியில் உள்ள குளக்கரைகளில் ஆயிரக்கணக்கான பனை விதைகள் நடவு செய்து வருகின்றனர்

புன்னகை அறக்கட்டளை சார்பில் குளக்கரையில் 2000 பனை விதைகள் நடும் பணி நடைபெற்றது.

புதுக்கோட்டை மாவட்டத்தில் புன்னகை அறக்கட்டளை சார்பில் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் பனை விதைகள் நடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். தொடர்ந்து வாரம் தோறும் ஒவ்வொரு பகுதியில் உள்ள குளக்கரைகளில் பொதுமக்களுடன் சேர்ந்து ஆயிரக்கணக்கான பனை விதைகள் நடவு செய்து வருகின்றனர்.

அதன் ஒரு பகுதியாக, அமரடக்கி புன்னகை அறக்கட்டளையின் தமிழ் மரம் நட்டல் திட்டத்தின் கீழ்,புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் ஒன்றியம், வயலோகம் ஊராட்சியில், அகரப்பட்டி பெரிய குளக்கரையில்2000 பனை விதைகள் நடும் விழா நடைபெற்றது, இதில் இந்திய குடியரசு தலைவர் விருதுபெற்ற முனைவர் மாதவன் தலைமை வகித்து தொடக்கி வைத்தார். சிறப்பு அழைப்பளாராக காங்கிரஸ் கமிட்டி மாநில பொதுச் செயலாளர் பெனட் அந்தோணிராஜ் கலந்து கொண்டார்.

இந்த நிகழ்ச்சியில், திமுக ஒன்றிய செயலாளரும் தலைமை செயற்குழு உறுப்பினர் சந்திரன் முன்னிலை வகித்தார்.மற்றும் புன்னகை அறக்கட்டளையின் நிறுவனத்தலைவர்.கலைபிரபு,ஜெகன் கெளரவத்தலைவர் விராலிமலை தொகுதி பொறுப்பாளர் எழுத்தாளர் சோலச்சி, மாநில ஒருங்கிணைப்பளர் ராஜ்கமல், வாராப்பூர் மகேந்திரன்,வயலோகம்ஊராட்சி மன்றதலைவர்செண்பகவள்ளி சேவுகன்,குறும்படஇயக்குநர்தங்கவேலுஆசிரியர் பாலசுப்பிரமணியன், நெறிகிப்பட்டி மாணிக்கம், தீர்த்தான், குணசேகரன், சந்திரன், பழனியப்பன், ராமநாதன், ஆரியா, ஆதவன், பிளமிங் வெள்ளைச்சாமி, இளைஞர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டு பனை விதைகள் நடவு செய்தனர்.


Tags

Next Story