தொடர் மழை காரணமாக மாத்தூரில் மழைநீர் வீடுகளுக்குள் புகுந்ததால் மக்கள் அவதி.

தொடர் மழை காரணமாக மாத்தூரில் மழைநீர் வீடுகளுக்குள் புகுந்ததால் மக்கள் அவதி.

தொடர் மழையின் காரணமாக மாத்தூரில் மழைநீர் வீடுகளுக்குள் புகுந்ததால் குடியிருப்புவாசிகள் அவதிப்பட நேரிட்டது

வீடுகளுக்குள் மழைநீர் புகுந்த வெளியேற்றுவதற்கான பொதுமக்கள் விடிய விடிய உறங்காமல் இருந்தனர்

தொடர் மழையின் காரணமாக மாத்தூரில் மழைநீர் வீடுகளுக்குள் புகுந்ததால் குடியிருப்புவாசிகள் அவதிப்பட நேரிட்டது.

புதுக்கோட்டை திருச்சி மாவட்ட எல்லையிலுள்ள விராலிமலை ஒன்றியத்துக்கு உட்பட்ட மாத்தூர் ஊராட்சி, விவேகானந்தர் நகர் பகுதியில் காலை முதல் பெய்த கனமழை காரணமாக 50க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் மழைநீர் புகுந்தது.இதனால் பொதுமக்கள் விடிய விடிய உறங்காமல் மழை நீரை வெளியேற்றுவதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

இருந்தபோதிலும் தொடர்ந்து பெய்த மழையால் மழை நீர் வெளியேறாமல் வீடுகளுக்குள் மழை நீர் அதிக அளவில் உள்ளே புகுந்ததால், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.இதுகுறித்து துறை சார்ந்த அதிகாரிகள், மற்றும் ஊராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுத்து மழை நீரை வெளியேற்றி தர வேண்டுமெனவும், தற்காலிகமாக தங்குவதற்கு முகாம்கள் ஏற்படுத்தித் தரவேண்டும் எனவும் அப்பகுதி குடியிருப்புவாசிகள் கோரிக்கை வைக்கின்றனர்.மேலும் இனி வருங்காலங்களில் இதுபோன்ற பாதிப்புகள் ஏற்படாத வகையில், மழைநீர் வடிகால் வசதி ஏற்படுத்தித் தர வேண்டும் என்பதும் அவரது கோரிக்கையாக உள்ளது.

Tags

Next Story