அரசு மருத்துவமனைக்கு ஆக்சிஜன் செறிவூட்டி: திமுக எம்பி அப்துல்லா வழங்கல்

அரசு மருத்துவமனைக்கு ஆக்சிஜன் செறிவூட்டி:   திமுக எம்பி  அப்துல்லா வழங்கல்
X

அன்னவாசல் அரசு மருத்துவமனைக்கு ஆக்சிசன் செறிவூட்டி இயந்திரங்கள் வழங்கிய மாநிலங்களவை எம்பி எம்எம் அப்துல்லா

புதுக்கோட்டை கிங்டவுன்- கிரவுன் சிட்டி ரோட்டரி சங்கம் மூலம் அன்னவாசல் அரசு மருத்துவமனைக்கு 2 ஆக்சிஜன் செறிவூட்டிகள் வழங்கப்பட்டது

புதுக்கோட்டை கிங்டவுன் மற்றும் கிரவுன் சிட்டி ரோட்டரி சங்கம் சார்பில் அன்னவாசல் அரசு மருத்துவமனைக்கு இரண்டு ஆக்சிஜன் செறிவூட்டிகளை திமுக எம்பி முகமதுஅப்துல்லா இன்று வழங்கினார்.

வெளிநாடு வாழ் இந்தியர்களால் தொடங்கப்பட்டுள்ள ஆக்ட் கிராண்ட்ஸ் என்ற அமைப்பும் ரோட்டரி சங்கங்களுக்கு இடையே இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டது. அத்திட்டம் மூலம், இந்தியா முழுவதும் சுமார் ரூ. 300 கோடி மதிப்பிலான ஆக்சிஜன் செறிவூட்டிகள் மற்றும் ஆக்சிஜன் சிலிண்டர்கள் வழங்க முன் வந்துள்ளனர்.

அந்தத்திட்டத்தின் ஒரு பகுதியாக, புதுக்கோட்டை கிங்டவுன் மற்றும் கிரவுன் சிட்டி ரோட்டரி சங்கம் சார்பில் அன்னவாசல் அரசு மருத்துவமனைக்கு இரண்டு 10LPM ஆக்சிஜன் செறிவூட்டிகள் வழங்கும் நிகழ்ச்சி, புதுக்கோட்டை கிங்டவுன் ரோட்டரி சங்கத் தலைவர் கணேஷ்குமார் மற்றும் கிரவுன் சிட்டி ரோட்டரி சங்கத் தலைவர் அன்பு ரவிக்குமார் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது. இதில், சிறப்பு விருந்தினராக மாநிலங்களவை திமுக உறுப்பினர் எம்.எம். அப்துல்லா கலந்து கொண்டு, அன்னவாசல் அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் சரவணனிடம் ஆக்சிஜன் செறிவூட்டிகளை வழங்கினார்.

நிகழ்ச்சியில், ரோட்டரி சங்க நிர்வாகிகள் க.நைனாமுகம்மது, முன்னாள் ரோட்டரி மாவட்ட செயலாளர் கான் அப்துல் கபார் கான், மாருதி கண.மோகன்ராஜா, துணை ஆளுநர் சிவாஜி, மண்டல ஒருங்கிணைப்பாளர் அந்தோணி, மருத்துவர்கள் மு.சையது முகமது, செந்தில் குமார் மருத்துவ அலுவலர்கள் மற்றும் பெருநகரச் செயலாளர் அக்பர் அலி ஆகியோர் கலந்து கொண்டனர். புதுக்கோட்டை மாவட்ட ரோட்டரி சங்கங்கள் மூலம் இதுவரை ,புதுக்கோட்டை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு 25 ஆக்சிஜன் செறிவூட்டிகள் மற்றும் 45லிட்டர் ஆக்சிஜன் சிலிண்டர்கள் 75 எண்ணிக்கையிலும் மற்றும் ஒன்பது தாலுகா தலைமை அரசு மருத்துவமனைகளுக்கு 17 ஆக்சிஜன் செறிவூட்டிகள் மற்றும் 35 ஆக்சிஜன் சிலிண்டர்கள் வழங்கப்பட்டுள்ளது. கொரோனா துயர்துடைக்கும் பணிகளுக்கு இதுவரை மொத்தம்ரூ. 60லட்சம் மதிப்பிலான சேவைத் திட்டங்கள் ரோட்டரி மூலம் அரசு மருத்துவமனைகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.


Tags

Next Story