முதுமையிலும் மிடுக்காய் வாழ கடுக்காய் : சித்த மருத்துவர் சுயமரியாதை தகவல்

முதுமையிலும் மிடுக்காய் வாழ கடுக்காய் :   சித்த மருத்துவர் சுயமரியாதை தகவல்
X

புதுக்கோட்டை மாவட்டம் பரம்பூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மக்களைத் தேடி மூலிகை நிகழ்ச்சியில் பேசிய சித்தமருத்துவர் சுயமரியாதை

மலச்சிக்கலை போக்க இரவில் தூங்கும் பொழுது கடுக்காய் தூள் ஒரு டீஸ்பூன் அளவு வெந்நீரில் கலந்து குடிக்க வேண்டும்

75 -ஆவது சுதந்திர தின விழாவையொட்டி, மத்திய ஆயுஷ் அமைச்சகத்தின் சார்பில், இந்தியா முழுவதும் 75 இலட்சம் மருத்துவ குணம் கொண்ட மூலிகை செடிகளை பொதுமக்களுக்கு வழங்க அறிவுறுத்தபட்டிருந்தது.

அதன்படி, புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் ஒன்றியம் பரம்பூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மக்களைத் தேடி மூலிகை நிகழ்ச்சி, வட்டார மருத்துவ அலுவலர் கலையரசன் தலைமையில் நடைபெற்றது.

நிகழ்ச்சியில், சித்த மருத்துவ அலுவலர் சுயமரியாதை கலந்து கொண்டு, பொது மக்களுக்கு மருத்துவ குணம்கொண்ட மூலிகைச் செடிகளை வழங்கினார். பின்னர், மூலிகைச் செடியின் பயன்கள், மருத்துவ குணங்கள் மற்றும் பயன்படுத்தும் விதங்கள் குறித்துப் பேசியதாவது: காற்றை தூய்மைப் படுத்தக் கூடிய , வளிமண்டலத்தில் ஆக்ஸிஜன் அளவை அதிகப்படுத்தக் கூடிய துளசி,நொச்சி,சோற்றுக்கற்றாழை ஆகியவற்றை ஒவ்வொரு வீட்டிலும் வளர்க்க வேண்டும்.அநேக நோய்களுக்கு மூலகாரணம் மலச்சிலக்கல் தான். எனவே மலச்சிக்கலை போக்க இரவில் தூங்கும் பொழுது கடுக்காய் தூள் ஒரு டீஸ்பூன் அளவு வெந்நீரில் கலந்து குடிக்க வேண்டும். இவ்வாறு செய்தால் நமக்கு எவ்வித நோயும் வராது.நாம் முதுமையிலும் மிடுக்காய் வாழலாம் என்றார். நிகழ்ச்சியில், பரம்பூர் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் சௌந்தர்யா,பல்மருத்துவர் நிஷா, கண் மருத்துவ உதவியாளர் பரணி, செவிலியர் தமிழரசி, ஆய்வக உதவியாளர்கள் அருள்முருகன், தாமரைச் செல்வி, மருத்துவமனை பணியாளர் காயத்ரி மற்றும் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.


Tags

Next Story