தங்கஅங்கி அலங்காரத்தில் தரிசனம் தந்த முருகன்

தங்கஅங்கி அலங்காரத்தில் தரிசனம் தந்த முருகன்
X

பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு குமரமலை அருள்மிகு ஸ்ரீ பாலதண்டாயுதபாணி கோவிலில் சுவாமிக்கு தங்க அங்கி அலங்காரத்தில் சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது.

இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான புதுக்கோட்டை அருகே உள்ள குமரமலையில் அருள்பாலித்து வரும் ஸ்ரீ பாலதண்டாயுதபாணி திருக் கோயில் பங்குனி உத்திரத் திருவிழாவை முன்னிட்டு சிறப்பு பூஜை வழிபாடு நடைபெற்றது. இதையொட்டி அருள்மிகு ஸ்ரீ பாலதண்டாயுதபாணிக்கு தங்க அங்கி அலங்காரத்தில் ராஜா அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது.

இதனை தொடர்ந்து உற்சவ மூர்த்திகள் வெள்ளி அலங்காரத்தில் எழுந்தருளி திருக்கோயிலுக்குள் மூன்று முறை திருவீதி உலா நடைபெற்றது. இந்நிகழ்வில் குமரமலையைச் சுற்றியுள்ள பக்தர்கள் கலந்துகொண்டு அருள்மிகு ஸ்ரீ பாலதண்டாயுதபாணியை வழிபட்டனர்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்