/* */

பணத்தை உரியவரிடம் ஒப்படைத்த வடமாநில கூலி தொழிலாளி

வங்கிக்குள் தவறி விழுந்த 50 ஆயிரம் பணத்தை எடுத்து சென்ற வட மாநிலத்தவர் உரியவரிடம் ஒப்படைத்த நெகிழ்ச்சியான சம்பவம்.

HIGHLIGHTS

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையில் பர்னிச்சர் கடை நடத்தி வருபவர் தங்கராஜ். இவர் பண பரிவர்த்தனை தொடர்பாக விராலிமலையில் உள்ள எஸ்பிஐ வங்கியில் பணம் செலுத்துவதற்காக மஞ்சள் பையில் வைத்து 3 லட்சத்தி 50 ஆயிரம் பணம் எடுத்து சென்றுள்ளார். இதில் 25 எண்ணிக்கையிலான 2000 ரூபாய் நோட்டு ரூ, 50 ஆயிரம் மஞ்சள் பைக்குள் இருந்து தவறி விழுந்துள்ளது இதை கவனிக்காத தங்கராஜ் வங்கி கவுண்டரில் பணத்தை செலுத்த முற்பட்டபோது தான் பணம் ரூ. 50,000 தொலைந்தது தெரியவந்தது. உடனடியாக கடையிலேயே பணத்தை வைத்து விட்டோமோ என்று பதறிக்கொண்டு கடைக்கு வந்த பார்த்தபோது கடையிலும் பணம் இல்லை.

இதில் சந்தேகமடைந்த தங்கராஜ் பணம் காணாமல் போனது குறித்து விராலிமலை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதனைத்தொடர்ந்து போலீசார் அப்பகுதிகளில் உள்ள சிசிடிவி பதிவு காட்சிகளை ஆய்வு செய்தபோது அதில் எந்த விவரமும் தெரியவில்லை. அதனை தொடர்ந்து வங்கியின் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது தங்கராஜ் வங்கிக்குள் வருவதும் அவர் பையில் இருந்து ரூபாய் 50 ஆயிரம் தவறி விழுவதும் அதை குனிந்து ஒருவர் எடுத்து தனது பாக்கெட்டில் வைப்பதும் சிசிடிவி காட்சியில் பதிவாகி இருந்தது.

இதனை தொடர்ந்து பணத்தை எடுத்தவர் யார் என்பது குறித்து விசாரணையை போலீசார் தொடங்கினர். இந்த நிலையில் வங்கியில் தவற விட்ட பணத்தை குனிந்து ஒருவர் எடுக்கும் சிசிடிவி காட்சி பதிவு சமூக வலைதளங்களில் வேகமாக பரவ தொடங்கியது. இதனையடுத்து இதுகுறித்து அறிந்த பணத்தை எடுத்து சென்ற உத்தர பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த அசோக் என்பவர் பணத்தை தவறவிட்ட தங்கராஜிடம் ரூபாய் 50 ஆயிரத்தை ஒப்படைத்தார். இவர் விராலிமலையில் தங்கி அங்கு உள்ள இரும்பு கம்பி தயாரிக்கும் தனியார் தொழிற்சாலையில் தொழிலாளியாக பணியாற்றி வரும் உத்திரபிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவர் அசோக் என்பது குறிப்பிடத்தக்கது.

Updated On: 13 July 2021 2:30 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    சீற்றத்தை அடக்கி ஆளும் சீறாப்புதல்வன், 'மௌனம்'..!
  2. லைஃப்ஸ்டைல்
    அடிப்படை தேவைகளுக்கு அப்பால்: நடுத்தர வர்க்கத்தின் கனவுகளும்...
  3. வீடியோ
    Savukku Shankar வழக்கில் அதிரடி திருப்பம் | நீதிமன்றம் அதிரடி உத்தரவு...
  4. லைஃப்ஸ்டைல்
    அமைதி உங்களுக்குள்தான் இருக்கிறது..? வெளியில் ஏன் தேடுகிறீர்கள்..?
  5. லைஃப்ஸ்டைல்
    நம்பிக்கை ஊட்டும் மேற்கோள்கள்: வாழ்க்கையை வெற்றிபெறும் திறவுகோல்!
  6. கவுண்டம்பாளையம்
    கோவை விமான நிலையத்தில் 1.220 கிலோ தங்ககட்டிகள் பறிமுதல்
  7. மேட்டுப்பாளையம்
    கோவையில் சட்டவிரோதமாக தங்கி பணிபுரிந்து வந்த இரு வங்கதேச இளைஞர்கள்...
  8. லைஃப்ஸ்டைல்
    மன ஆரோக்கியத்திற்கு வழி செய்யும் தந்திரங்கள்
  9. வீடியோ
    🔴LIVE : தெலுங்கானாவில் அண்ணாமலையின் அனல் பறக்கும் உரை || #annamalai...
  10. தமிழ்நாடு
    சவுக்கு சங்கர் மீது சென்னையில் வழக்கு..!