காவிரி குடிநீர் குழாய் உடைப்பு சரி செய்யும் பணியை ஆய்வு செய்த எம்எல்ஏ விஜயபாஸ்கர்
புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை தொகுதியில் உள்ள எண்ணை ஊராட்சியில் நடைபெற்ற வரும் குடிநீர் குழாய் உடைப்பு சரி செய்யும் பணியை ஆய்வு செய்த எம்எல்ஏ விஜயபாஸ்கர்
காவிரி குடிநீர் குழாய் உடைப்பு சரி செய்யும் பணியை எம்எல்ஏ விஜயபாஸ்கர் இன்று ஆய்வு செய்தார்.
புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை சட்டமன்றத் தொகுதிக்கு உள்பட்ட எண்ணை ஊராட்சியில் காவிரி குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டு சரி செய்யும் பணியில் அலுவலர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
புதுக்கோட்டை வடக்கு மாவட்ட அதிமுக செயலாளரும் விராலிமலை தொகுதி எம்எல்ஏ-வுமான விஜயபாஸ்கர் இன்று காவிரி குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டு சரி செய்யப்பட்டு வரும் பணியினை ஆய்வு செய்தார்.
அதிமுக ஆட்சிக் காலத்தில் சுமார் 7 ஆண்டுகள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பதவியில் இருந்த பொழுது வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்தது தொடர்பாக, தமிழகம் முழுவதும் அவருக்கு சொந்தமான வீடுகள் அலுவலகங்கள் மற்றும் நண்பர்கள் உறவினர்கள் வீடுகள் உள்ளபட 50 இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் நேற்று சோதனை செய்து வழக்குப்பதிவு செய்துள்ளனர் இந்த நிலையில், இன்று சகஜமாக தனது விராலிமலை தொகுதிக்கு வந்த முன்னாள் அமைச்சரும், எம்எல்ஏவுமான விஜயபாஸ்கர், பல்வேறு பணிகளை ஆய்வு செய்ததுடன், கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தியது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu