புதுக்கோட்டை மாவட்ட எல்லைக்கு வந்த அரசின் அலங்கார ஊர்தியை வரவேற்ற அமைச்சர்கள்

விராலிமலை வந்த இந்த ஊர்தியானது மதுரை மாநகர் வண்டியூர் தெப்பக்குளம் அருகில் பொதுமக்களின் பார்வைக்காக பயணிக்கிறது

புதுக்கோட்டை மாவட்ட எல்லைக்கு வருகை தந்த தமிழக அரசின் வாகன ஊர்தியை வரவேற்ற அமைச்சர்கள்

தில்லியில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் பங்கேற்க சென்ற தமிழக அரசு சார்பில் வடிவமைக்கப்பட்ட சுதந்திர போராட்ட வீரர்கள் மற்றும் சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்ட வீரர்கள் உள்ளிட்ட பல்வேறு நுட்பங்களைக் கொண்டு வடிவமைக்கப்பட்ட அலங்கார ஊர்தியை மத்திய அரசு குடியரசு தின விழா அணிவகுப்பில் கலந்து கொள்ள மத்திய அரசு அனுமதி மறுத்ததை அடுத்து அந்த அனைத்து வாகன ஊர்திகளும் தமிழகத்தில் நடைபெற்ற குடியரசு தின விழா அணிவகுப்பில் கலந்து கொள்ளும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்திருந்தார்.

அதன்படி,தில்லியில் அனுமதி மறுக்கப்பட்ட வாகன ஊர்திகளை தமிழகம் முழுவதும் பொதுமக்கள் தெரிந்துகொள்ளும் விதத்தில் பல்வேறு மாவட்டங்களுக்கும் செல்வதற்காக வாகன ஊர்தியை தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் சென்னையில் துவக்கி வைத்தார்.

இந்திய விடுதலைப் போரில் தமிழகத்தின் பங்களிப்பை போற்றுகின்ற வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள அந்த அலங்கார ஊர்தியானது திருச்சி - மதுரை தேசிய நெடுஞ்சாலையில், புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை வட்டம், மேலப்பச்சக்குடியில் இன்று வந்தது. அங்கு நடந்த நிகழ்ச்சியில், தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி மற்றும் தமிழக சுற்றுச்சூழல் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதன் ஆகியோர் அலங்கார ஊர்திக்கு வரவேற்பளித்து பார்வையிட்டனர். இதையடுத்து, புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை சுங்கச்சாவடியில் வருகை தந்த அலங்கார ஊர்தியினை மாவட்ட ஆட்சித்தலைவர் கவிதா ராமு, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நிஷா பார்த்திபன் ஆகியோர் பார்வையிட்டனர்..

இந்த ஊர்தியின் முகப்பில் தமிழகத்தில் வேலூர் கோட்டையில் 1806-ஆம் ஆண்டு நடைபெற்ற சிப்பாய்ப் புரட்சி, ஆங்கிலேயர்களை எதிர்த்து வீரமுடன் போர் புரிந்து தூக்குக்கயிற்றை முத்தமிட்ட சிவகங்கை சீமையை ஆண்ட மாமன்னர் மருது சகோதரர்கள், சிவகங்கையை மீட்ட வீரமங்கை வேலு நாச்சியார், வீரமங்கை வேலுநாச்சியாரின் போர்ப்படையில் பெண்கள் படைக்கு தலைமையேற்று, வெள்ளையர்களின் ஆயுதக் கிடங்கினைத் அழித்து தன்னுயிரைத் தியாகம் செய்த வீராங்கனை குயிலி. ஆங்கிலேயர்களின் ஆட்சியினை எதிர்த்து தீரமாய்ப் போரிட்டுத் தூக்கிலிடப்பட்ட வீரபாண்டிய கட்டபொம்மன்.

அவரது படையில் தளபதியாக விளங்கிய தூத்துக்குடி மாவட்ட கவர்னகிரி வீரன் சுந்தரலிங்கம், அன்னியப் படையை தனியாகச் சென்று அழித்த நெற்கட்டும் செவல் பிறப்பிடமாகக் கொண்ட ஒண்டிவீரன், இந்திய விடுதலை வரலாற்றில் 'வெள்ளையனே வெளியேறு" என்று முதன் முதலாக வீர முழக்கமிட்ட நெற்கட்டும் செவல் மாவீரன் பூலித்தேவன், பாளையக்காரர்கள் ஆங்கிலேயர்களுக்குக் கப்பம் கட்டுவதைத் தடுத்த கட்டாலங்குளம் மன்னர் மாவீரன் அழகு முத்துக்கோன், வெள்ளையர்களை எதிர்த்து முதல் சுதந்திரப் போரைத்தொடங்கிய மாமன்னர் மருது சகோதரர்கள் கட்டி எழுப்பிய காளையார்கோயில் கோபுரம் உள்ளிட்ட பல சுதந்திரப் போராட்ட வீரர்களின் உருவங்கள் உயிர்ப்புடன் காட்சி தரும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை வட்டம், மேலப்பச்சக்குடியில் வந்த இந்த ஊர்தியானது மதுரை மாநகர் வண்டியூர் தெப்பக்குளம் அருகில் பொதுமக்களின் பார்வைக்காக பயணிக்கிறது.

இந்நிகழ்ச்சியில், புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் மருத்துவர் முத்துராஜா ,முன்னாள் அரசு வழக்கறிஞர் செல்லபாண்டியன், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் சத்தியமூர்த்தி, ஒன்றியக்குழுத் தலைவர் மணி, மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் மதியழகன், ஒன்றியக்குழு உறுப்பினர் சத்தியசீலன், ஊராட்சிமன்றத் தலைவர் லதா சுப்பிரமணியன், மணி மற்றும் அலுவலர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!