அமைச்சர் விஜயபாஸ்கர் காளையை பிடித்த வீரருக்கு அடி விழுந்ததால் பரபரப்பு
விராலிமலை அருகே நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் முன்னாள் அமைச்சரின் காளையை பிடித்த வீரரை ஆதரவாளர்கள் அடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது
தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை ஒட்டி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் ஜல்லிக்கட்டு போட்டி மஞ்சவிரட்டு போட்டி வடமாடு போட்டி என பல்வேறு போட்டிகள் நடைபெற்று வருவது வழக்கம். அதேபோல் தமிழகத்திலேயே அதிக அளவில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறுவது புதுக்கோட்டை மாவட்டத்தில்தான்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் இன்று வரை 50க்கும் மேற்பட்ட ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற்று முடிந்துள்ளது. இன்று விராலிமலை அருகே மண மேட்டுப்பட்டியில் மெய்கண்ணுடையான் கோவில் திருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் 600 காளைகளும் 200 மாடுபிடி வீரர்களும் கலந்து கொண்டு போட்டி விறுவிறுப்பாக நடைபெற்றது.
ஜல்லிக்கட்டு போட்டியில் விராலிமலை சட்டமன்ற உறுப்பினரும் அதிமுக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் கொம்பன் காளை தமிழகம் முழுவதும் அதிக ஜல்லிக்கட்டில் பங்கேற்று ஜல்லிக்கட்டு போட்டிகள் பிடிக்க முடியாத காளையாக வலம் வந்துகொண்டிருக்கிறது.
இந்நிலையில் இன்று நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் கொம்பன் காளை அவிழ்த்து விடப்பட்டது. வாடிவாசலில் இருந்து சீறிப்பாய்ந்த கொம்பன் காளையை பிடிக்க வீரர்கள் போட்டி போட்டு முயற்சி செய்தனர் ஆனாலும் பிடித்த வீரர்களை தூக்கி வீசி சீறிப்பாய்ந்து சென்றது
அப்போது எல்லைக்கோட்டின் அருகில் ஒரு வீரர் பிடித்து முற்பட்டபோது, ஜல்லிக்கட்டை கொண்டுவந்தவர்கள் அந்த வீரரை அடித்து தள்ளி விட்டனர். இதனால், ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்ற வீரர்களுக்கும் கொம்பன் காளையை கொண்டுவந்த நிர்வாகிகளுக்கும் கைகலப்பு ஏற்பட்டது. ஒருவருக்கு ஒருவர் மாறி அடித்துக் கொள்ள முற்பட்டதால், பரபரப்பு ஏற்பட்டது.
இதனை அடுத்து சண்டையிட்டுக் கொண்டிருந்தவர்களை காவல்துறையினர் சமாதானப்படுத்தி அங்கிருந்து அனுப்பி வைத்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu