உள்ளாட்சித் தேர்தல் : தீவிர பிரசாரத்தில் பாரதிய ஜனதாகட்சியினர்

உள்ளாட்சித் தேர்தல் : தீவிர பிரசாரத்தில் பாரதிய ஜனதாகட்சியினர்
X

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை தொகுதி அன்னவாசல் ஒன்பதாவது வார்டு  மாவட்ட ஊராட்சிக் போட்டியிடும்   பாஜக வேட்பாளரை ஆதரித்து  தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வரும்  மாவட்ட துணைத்தலைவர் ஏவிசிசி  கணேசன்

பாரதிய ஜனதா கட்சியினர் மேலூர், அம்மன்பேட்டை, இரும்பாளி,வெள்ளனூர் ஊராட்சி பகுதிகளில் வாக்கு சேகரித்தனர்

உள்ளாட்சித்தேர்தலில் பாஜக மாவட்டத் துணைத் தலைவர் ஏவிசிசி கணேசன் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டார்.

புதுக்கோட்டை மாவட்ட ஊராட்சியின் 9வது வார்டு உறுப்பினர் பதவிக்கு நடைபெறும் இடைத்தேர்தலில், போட்டியிடும் பாரதிய ஜனதா கட்சியின் வேட்பாளர் சாந்தாருக்கு ஆதரவாக புதுக்கோட்டை மாவட்ட பாஜக துணைத்தலைவர் ஏவிசிசி கணேசன் தலைமையில் பாரதிய ஜனதா கட்சியினர் மேலூர், அம்மன்பேட்டை, இரும்பாளி,வெள்ளனூர் ஊராட்சி பகுதிகளில் வாக்கு சேகரித்தனர்.

முன்னதாக, மேலூர் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் உழவாரப் பணிகள் நடத்தப்பட்டு, பிரதமர் மோடி பிறந்த நாள் சேவை தின விழா கேக் வெட்டி, இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டது. மேலூர் சுற்று வட்டார பொது மக்கள் சார்பாக இலவச தடுப்பூசி வழங்கியதற்கு நன்றி தெரிவித்தும், பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தும் பிரதமர் மோடிக்கு 300 வாழ்த்து அஞ்சல் அட்டைகள் அனுப்பினர்.

பிரசாரத்தில், முன்னாள் கோட்ட அமைப்புச் செயலாளர் தாமரைச் செல்வன், மாவட்டச் செயலாளர் விஜயகுமார்,புதுக்கோட்டை நகரத் தலைவர் சுப்பிரமணியன், நகரப் பொதுச் செயலாளர் லெட்சுமணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பட்டியல் அணி மேனாள் மாவட்டத் தலைவர் ஆறுமுகம், தகவல் தொழில்நுட்ப மாவட்ட செயலாளர் கார்த்திகேயன்,நகரத் துணைத் தலைவர் சிவ.இளங்கோ, மதன்குமார், கைலாஷ், சிங்காரம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். விழாவில், மாற்றுத் திறனாளி சிறுவனுக்கு ஏவிசிசி கணேசன் கேக் ஊட்டி ஊக்கப்பரிசு வழங்கினார்.ஏற்பாடுகளை மேலூர் செந்தில், சரோஜா மற்றும் ஒன்றிய நிர்வாகிகள் ஒருங்கிணைப்பு செய்திருந்தனர்.


Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!